spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சென்னைசென்னை கடற்கரை - எழும்பூர் இடையே புதிய வழிதடம் - மார்ச் 10 ஆம் தேதி...

சென்னை கடற்கரை – எழும்பூர் இடையே புதிய வழிதடம் – மார்ச் 10 ஆம் தேதி தொடக்கம்

-

- Advertisement -

சென்னை கடற்கரை – எழும்பூர் இடையே புதிதாக அமைக்கப்பட்டுள்ள 4-ஆவது வழித்தடத்தில் அதிவிரைவு ரயில்கள் மார்ச் 10 ஆம் தேதி முதல் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வேயின் முதன்மை தலைமை மின் பொறியாளர் சோமஸ் குமார் தெரிவித்தார்.

சென்னை கடற்கரை - எழும்பூர் இடையே புதிய வழிதடம் - மார்ச் 10 ஆம் தேதி தொடக்கம்சென்னை எழும்பூர் – கடற்கரை இடையே மூன்று வழித்தடங்கள் உள்ளது. இதில் இரண்டு பாதையில் புறநகர் ரயில்களும், ஒரு பாதையில் விரைவு மற்றும் சரக்கு ரயில்களும் இயக்கப்பட்டு வருகிறது. இதில் கூடுதல் ரயில் பாதை இல்லாததால், அதிக ரயில்களை இயக்க முடியாத நிலையும்  இருந்து வருகிறது.

we-r-hiring

இதை கருத்தில்கொண்டு, எழும்பூர் – கடற்கரை வரை 4-வது பாதை அமைக்க வேண்டும் என பொதுமக்கள் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. அதன் அடிப்படையில் 4 ஆவது பாதை அமைக்க ரயில்வே வாரியம் ஒப்புதல் அளித்தது. இதைத்தொடர்ந்து,  274.20 கோடி ரூபாய் மதிப்பில், கடந்த 2023 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் 4 ஆவது வழித்தடம்  அமைக்கும் பணியானது தொடங்கியது.

தற்போது 100 சதவீத பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில் சென்னை கடற்கரை – எழும்பூா் 4-ஆவது வழித்தடத்தில் அதிவிரைவு ரயிலை இயக்கி சோதனை நடத்தப்பட்டது. தெற்கு ரயில்வேயின் முதன்மை தலைமை மின் பொறியாளர் சோமஸ் குமார் 4 – ஆவது வழித்தடத்தில் ஆய்வு செய்த பின் அதிவேக சோதனை ஓட்டம் நடைபெற்றது. இச்சோதனையில் ஏதாவது குறைபாடுகள் இருந்தால், அதனை உடனடியாக சரி செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சோதனை ஓட்டம் நடைபெற்றதால் பொதுமக்கள் யாரும் ரயில் பாதைகளை நெருங்கவோ, அத்துமீறி நுழையவோ கூடாது என்று ரயில்வே அறிவுறுத்தல் வழங்கப்பட்டது.

அப்போது செய்தியாளர்களை சந்தித்த  தெற்கு ரயில்வேயின் முதன்மை தலைமை மின் பொறியாளர் சோமஸ் குமார்,  சென்னை கடற்கரை – எழும்பூர் ரயில் நிலையத்துக்கு இடையே அமைக்கப்பட்டுள்ள 4 ஆவது வழிதடத்தில் ஆய்வு செய்துள்ளோம். இந்த பணிகள் முடிந்துள்ளதால் அதிவிரைவு ரயில்களை அதிகளவில் இயக்கமுடியும். மார்ச் 9 ஆம் தேதி மற்றொரு ஆய்விற்கு பின்10 ஆம் தேதி முதல் புதிதாக அமைக்கப்பட்டுள்ள நான்காவது வழித்தடத்தில் விரைவு ரயில்கள் இயக்கப்பட உள்ளது எனவும் தெரிவித்தார்.

சென்ட்ரலில் இருந்து வட மாநிலங்களுக்கு அதிக அளவில் ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. இனி வரும் நாட்களில் எழும்பூரில் இருந்தும் வட மாநில ரயில்கள் அதிக அளவில் இயக்க நான்காவது வழிதடம் பயனுள்ளதாக இருக்கும் என்று தெற்கு ரயில்வேயின் முதன்மை தலைமை மின் பொறியாளர் சோமஸ் குமார் தெரிவித்தார்.

MUST READ