பயணிகள் ஒரே அட்டையைப் பயன்படுத்தி சென்னை மெட்ரோ மட்டுமின்றி, மாநகரப் பேருந்துகள், புறநகர் ரயில்கள் மற்றும் இந்தியாவின் பிற நகரங்களில் உள்ள மெட்ரோ சேவைகளிலும் ஒரே அட்டையைப் பயன்படுத்திப் பயணிக்க முடியும் என்று மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது.
2026 மே 1 முதல், சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் முழுமையாக “சிங்கார சென்னை அட்டை” எனப்படும் தேசிய பொது போக்குவரத்து அட்டை (NCMC) முறைக்கு மாறுகிறது. மத்திய அரசின் “ஒரே நாடு – ஒரே அட்டை” திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த மாற்றம் நடைமுறைக்கு வருகிறது .

இதன் மூலம், பயணிகள் ஒரே அட்டையைப் பயன்படுத்தி மெட்ரோ ரயில் மட்டுமின்றி, மாநகர பேருந்துகள், புறநகர் ரயில்கள் உள்ளிட்ட பல்வேறு பொதுப் போக்குவரத்து சேவைகளிலும் சுலபமாக பயணம் செய்ய முடியும். மேலும், வாகன நிறுத்த கட்டணங்களையும் இதன் மூலம் செலுத்தும் வசதி வழங்கப்படுகிறது.
பழைய பயண அட்டைகள் வைத்திருப்பவர்கள் கவலைப்பட தேவையில்லை. அட்டையில் உள்ள இருப்புத் தொகையை இழக்க வேண்டிய அவசியமில்லை என்று மெட்ரோ நிர்வாகம் உறுதி அளித்துள்ளது. அந்தத் தொகையை திரும்பப் பெறவும், மாற்றிக்கொள்ளவும் இரண்டு எளிய வழிகள் உள்ளன. சென்னை மெட்ரோ மொபைல் செயலி மூலம் பழைய கார்டில் உள்ள பணத்தை QR அடிப்படையிலான “ஸ்டோர்டு வேல்யூ பாஸ்” (Stored Value Pass – SVP) ஆக மாற்றிக்கொள்ளலாம். அல்லது, அதே தொகையை புதிய சிங்கார சென்னை அட்டைக்கு மாற்றிக் கொள்ளலாம்.
இந்த மாற்றம் தொடக்கத்தில் பயணிகளுக்கு சற்று சிரமமாக இருக்கக்கூடும். இருப்பினும், நீண்ட காலத்தில் இது பாதுகாப்பான, விரைவான மற்றும் ஒருங்கிணைந்த போக்குவரத்து அனுபவத்தை வழங்கும் என மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது. நகரின் போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்கும், நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி சேவையை மேம்படுத்துவதற்குமான முக்கியமான படியாக இந்த மாற்றம் பார்க்கப்படுகிறது.
பயணிகளுக்கு ஏற்படும் இடையூறுகளுக்கு மன்னிப்பு கோரியுள்ள மெட்ரோ நிர்வாகம், இந்த புதிய முறையின் மூலம் தடையற்ற மற்றும் வசதியான பயணத்தை உறுதி செய்வோம் என நம்பிக்கை அளித்துள்ளது.
ஏப்ரல் 23 – சென்னையில் சிறப்பு சலுகை… இலவசமாக பேருந்தில் பயணிக்கலாம்…
