சென்னையில் ஆன்லைன் சூதாட்டத்தால் பணத்தை இழந்த ஒருவர் தூக்கிட்டு தற்கொலை. சோலையூர் அடுத்த மாடம் பாக்கத்தை சேர்ந்த மருந்து விற்பனை பிரதிநிதி வினோத்குமார் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
ஆன்லைன் சூதாட்டத்தால் மீண்டும் ஒருவர் தற்கொலை செய்து கொண்டார். ஆன்லைன் சூதாட்டத்தால் ரூபாய் 20 லட்சத்தை இழந்ததால் வினோத்குமார் என்பவர் தற்கொலை செய்து கொண்டார்.

தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டத்தில் மேலும் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது. வினோத் குமாரின் உடலை கைப்பற்றி சோலையூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வினோத்குமார் கடந்த ஒன்றரை ஆண்டாக வீட்டில் தனிமையில் இருந்து வந்த நிலையில் தற்கொலை செய்து கொண்டார். கடும் மன உளைச்சலில் இருந்து வந்த வினோத்குமார் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
வினோத்குமாரின் உடலை கைப்பற்றி சோலையூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஆன்லைன் சூதாட்டத்திற்காக லோன் ஆப்புகள் மூலமும் கடன் பெற்றதால் 20 லட்சம் ரூபாய் நஷ்டம் ஏற்பட்டதால் மன உளைச்சலில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்