சென்னை அம்பத்தூரில் ஆளுநருக்கு கருப்புக் கொடி காட்ட முயன்ற மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட்டு கட்சியினர் வலுக்கட்டாயமாக கைது செய்யப்பட்டனர்.
அம்பத்தூர் மேனாம்பேடு பகுதியில் உள்ள அன்னை வயலட் பொறியியல் கல்லூரி பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்ள தமிழ்நாடு ஆளுநர் R.N.ரவி வந்தார்.
ஆன்லைன் சூதாட்ட மோசடியினால் நாள் தோறும் ஓரிருவர் இறந்து கொண்டு இருக்கின்றனர். அதுகுறித்து சட்டமன்றத்தில் நிறைவேற்றிய தீர்மாணத்தை ஆளுநர் மீண்டும் அரசுக்கு அனுப்பினார். அதனை கண்டித்து நாடு முழுவதும் போராட்டம் நடைபெற்று வருகிறது.
அதன் ஒரு பகுதியாக அம்பத்தூரில் மார்க்ஸிஸ்ட் கட்சியினர் ஆளுநரை கண்டித்து கருப்புக் கொடி ஏந்தி கொரட்டூர் – பாடி சந்திப்பில் சாலையோரம் கூடியிருந்தனர்.
அவர்களை கொரட்டூர் காவல் துறையினர் வலுக்காட்டாயமாக கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் அடைத்து வைத்துள்ளனர்.இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.