spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சென்னைவடசென்னை: குடியிருப்புகளை சூழ்ந்த மழை நீர்…எம்.எல்.ஏக்கள் அதிரடி ஆய்வு

வடசென்னை: குடியிருப்புகளை சூழ்ந்த மழை நீர்…எம்.எல்.ஏக்கள் அதிரடி ஆய்வு

-

- Advertisement -

மணலி,மாதவரம்,திருவெற்றியூர்,பெரம்பூர்,ஆர்கே நகர் பகுதியில் இருந்து பக்கிங்ஹாம் கால்வாய் வழியாக வெளியேறும் மழை நீர் தடை இன்றி செல்கிறதா என்பது குறித்து எம்.எல்.ஏக்கள் ஆய்வுகளை மேற்கொண்டனர்.வடசென்னை: குடியிருப்புகளை சூழ்ந்த மழை நீர்…எம்.எல்.ஏக்கள் அதிரடி ஆய்வு

சென்னை வடக்கு பகுதிகளில் தொடர்ச்சியான மழையால் பல இடங்களில் தண்ணீர் தேங்கி பொதுமக்கள் அவதிப்பட்டு வரும் நிலையில், திருவொற்றியூர், மணலி, மாதவரம், பெரம்பூர், ஆர்.கே.நகர் பகுதிகளில் மழைநீர் வெளியேற்றப்படும் நிலையை எம்.எல்.ஏக்கள் இணைந்து ஆய்வு செய்தனர்.

we-r-hiring

திருவொற்றியூர் மேற்கு பகுதியில் உள்ள ராஜாஜி நகர், வெற்றி விநாயகர் நகர் மற்றும் கார்கில் நகர் பகுதிகளில் முழங்கால் அளவிற்கு மழைநீர் தேங்கி குடியிருப்பு மக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர். மழைநீர் வெளியேறும் வழிகள் அடைந்து இருப்பதால், குடியிருப்புகளை சுற்றியுள்ள தண்ணீர் வெளியேற முடியாமல் பொதுமக்கள் நீரில் நடந்து செல்லும் நிலை ஏற்பட்டது.

இந்த சூழலைக் கண்டு உடனடியாக நடவடிக்கை எடுத்த திருவொற்றியூர் சட்டமன்ற உறுப்பினர் கே.பி. சங்கர், ஜே.சி.பி வாகனங்களை அழைத்து கால்வாய்கள் மற்றும் சாலைகளில் தடையாக இருந்த குப்பைகளை அகற்றச் செய்தார். இதன் மூலம் மழைநீர் சுலபமாக வெளியேறுவதற்கான பாதைகள் சீரமைக்கப்பட்டன.

மணலி, மாதவரம், பெரம்பூர், ஆர்.கே.நகர் போன்ற வடசென்னை பகுதியிலிருந்து வரும் மழைநீர் அனைத்தும் பக்கிங்ஹாம் கால்வாய் வழியாக ஒன்று சேர்ந்து, பின்னர் திருவொற்றியூர் கடற்கரை பகுதியில் கடலில் கலக்கிறது. இந்த முக்கிய கால்வாய் வழியில் நீர் தடை இன்றிச் செல்கிறதா என்பது குறித்து ஆய்வு செய்யப்பட்டது.

திருவொற்றியூர் எம்.எல்.ஏ கே.பி. சங்கர், ஆர்.கே.நகர் எம்.எல்.ஏ சுதர்சனம், மாநகராட்சி பொறியாளர்கள் மற்றும் துறை அதிகாரிகள் இணைந்து கால்வாய் பகுதிகளை நேரில் ஆய்வு செய்தனர். மழைநீர் வெளியேற்ற பாதைகளில் அடைப்புகள் உள்ளனவா, தண்ணீர் தடை இன்றி செல்லுகின்றதா, மேலும் சீரமைப்பு தேவைப்படும் இடங்கள் உள்ளனவா என்பதையும் எம்.எல்.ஏக்கள் ஆய்வு செய்தனர்.

எடப்பாடி பழனிசாமிக்கு பாடம் புகட்ட செங்கோட்டையன் தயாராகி விட்டார் – டிடிவி தினகரன் பேட்டி

MUST READ