கல்லூரி மாணவியை ரயிலில் தள்ளிவிட்டு கொண்ற வழக்கில் குற்றவாளி சதீஷூக்கு தண்டனை குறைத்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
2022 அக்டோபர் 13 ஆம் தேதி, கல்லூரிக்கு செல்ல பரங்கிமலை ரயில் நிலையம் வந்த மாணவியை, தாம்பரம் நோக்கி வந்த மின்சார ரயிலில் தள்ளி கொலை செய்த குற்றச்சாட்டில் சதீஷ் கைது செய்யப்பட்டார். இவ்வழக்கை விசாரித்த சென்னை மகளிர் சிறப்பு நீதிமன்றம், 2024 டிசம்பர் 30 அன்று சதீஷுக்கு தூக்கு தண்டனை வழங்கி தீர்ப்பளித்தது.

தூக்கு தண்டனையை உறுதிப்படுத்துவதற்காக வழக்கு வழக்கப்படி சென்னை உயர்நீதிமன்றத்துக்கு அனுப்பப்பட்டது. அதேசமயம், தண்டனையை எதிர்த்து சதீஷ் தரப்பும் மேல்முறையீடு செய்திருந்தது.
இரு தரப்புகளின் மனுக்களையும் விசாரித்த நீதிபதிகள் சதீஷ்குமார் மற்றும் ஜோதிராமன் அமர்வு இன்று தீர்ப்பளித்தது. அதில், 20 ஆண்டுகள் எந்தவித தண்டனை குறைப்பும் வழங்கக்கூடாது என கட்டுப்பாடு விதிக்கப்பட்டது. கல்லூரி மாணவியின் கொலையில் குற்றவாளியாக நிரூபிக்கப்பட்ட சதீஷ், குறைந்தது 20 ஆண்டுகள் சிறையிலேயே இருக்க வேண்டும் என்று தீர்ப்பளித்துள்ளது.


