Homeசெய்திகள்க்ரைம்சாலைகளில் சுற்றித்திரிந்த மாடுகளின் உரிமையாளர் கைது

சாலைகளில் சுற்றித்திரிந்த மாடுகளின் உரிமையாளர் கைது

-

சாலைகளில் சுற்றித்திரிந்த மாடுகளின் உரிமையாளர் கைது

திருமுல்லைவாயல் பகுதி சோழன் நகர் பகுதியில் வசித்துக் கொண்டிருப்பவர் கீதா-38 இவருக்கு சொந்தமான மாடு சாலையில் சுற்றித்திரிந்ததால் அபராதம் விதிக்க மாநகராட்சி சுகாதாரத்துறை ஆய்வாளர் பிரகாஷ் மாடுகளை பிடித்து மாநகராட்சிக்கு சொந்தமான பட்டியில் கட்டி வைத்துள்ளார்.

சாலைகளில் சுற்றித்திரிந்த மாடுகளின் உரிமையாளர் கைது

மாடு காணாமல் போனதை அறிந்த மாட்டின் உரிமையாளர் மாடுகளை தேடி அலைந்து உள்ளார். பின்னர் தகவல் அறிந்து மாடு இருந்த இடத்தை சென்று அவரும் அவரது உறவினர்களும் மாட்டை பட்டியில் இருந்து அத்துமீறி மீட்டுக்கொண்டு வந்துள்ளனர்.

சாலைகளில் சுற்றித்திரிந்த மாடுகளின் உரிமையாளர் கைது

பட்டியில் மாடு காணாமல் போய் இருந்ததை கண்ட சுகாதாரத்துறை ஆய்வாளர் திருமுல்லைவாயல் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன் அடிப்படையில் காவல்துறையினர் மாட்டின் உரிமையாளர் கீதா மற்றும் அவரது உறவினர் உமா-38, மகா-30, தேவி-51 ஆகிய மூவறையும், வழக்கு பதிவு செய்து அம்பத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். மாட்டின் உரிமையாளர் கீதா மாற்றுத்திறனாளி என்பதால், அவரது உறவினர் மூவர் மீது வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தது குறிப்பிடத்தக்கது.

MUST READ