சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமம் (CMDA) சார்பில் நடைபெற்று வரும் பல்வேறு பணிகளை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு ஆய்வு செய்துள்ளார்.
பேருந்து நிலையத்தில் பேருந்து பயணிகளுக்கு வசதிகள் முறையாக செய்து தரப்பட்டுள்ளதா குறைபாடுகள் ஏதேனும் உள்ளதா என்பது குறித்து ஆய்வு மேற்கொண்டார் .பயணிகளுக்கு அடிப்படை வசதிகளில் குறைபாடு இருக்கக்கூடாது, கழிவறைகள் தூய்மையாக இருக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு எச்சரித்துள்ளார். பேருந்து நிலையத்தில் செயல்படும் தனியார் உணவகங்களுக்குச் சென்று உணவின் தரம் குறித்தும் விலை பட்டியல் குறித்தும் கேட்டிருந்திருக்கிறார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், சென்னையில் அடுத்தாண்டுக்குள் மேலும் 7 புதிய பேருந்து நிலையங்கள் திறக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
உலகளாவிய மையம் – சுற்றுச்சூழல் அனுமதி கோரிய செயிண்ட் கோபைன் நிறுவனம்