Homeசெய்திகள்சென்னை2.19 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு - முதல்வர் தொடக்கம்

2.19 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு – முதல்வர் தொடக்கம்

-

- Advertisement -

தமிழர் திருநாள் பொங்கல் பண்டிகை முன்னிட்டு கூட்டுறவு உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை சார்பில் தமிழ்நாடு முழுவதும் அரிசி குடும்பத்தினர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் நிகழ்வினை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

தமிழர் திருநாள் திருநாளான பொங்கல் பண்டிகையை பொதுமக்கள் மிக விமர்சையாக கொண்டாட வேண்டும் என்ற அடிப்படையில் தமிழ்நாடு அரசு சார்பில் பொங்கல் சிறப்பு பரிசு தொகுப்பு வழங்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார்.

ஒவ்வொரு குடும்ப அட்டைதாரர்களுக்கும் குறிப்பாக ஆயிரம் ரூபாய் ரொக்கமும் அதே நேரத்தில் பச்சரிசி, சர்க்கரை மற்றும் கரும்பு, வேட்டி சேலை போன்றவை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதனைத் தொடர்ந்து சிறப்பு பரிசு தொகுப்பு வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் தொடங்கி வைத்தார்.

சென்னை தலைமைச் செயலகம் அருகே இருக்கக்கூடிய சத்யா நகர் நியாய விலை கடையில் இந்தத் திட்டத்தினை முதல்வர் தொடங்கி வைத்தார்.

MUST READ