Homeசெய்திகள்சென்னைதமிழ்நாட்டு அதிகாரிக்கான மதிப்பே தனி – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

தமிழ்நாட்டு அதிகாரிக்கான மதிப்பே தனி – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

-

- Advertisement -

சென்னையில் யு.பி.எஸ்.சி. தேர்வு வெற்றியாளர்களுக்கு நடைபெறும் பாராட்டு விழாவில் முதலமைச்சர் உரையாற்றினார்.யு.பி.எஸ்.சி. தேர்வில் வெற்றி பெற்றவா்களுக்கு பாராட்டு – முதலமைச்சா் மு.க.ஸ்டாலின்சென்னையில் யு.பி.எஸ்.சி. தேர்வில் வெற்றி பெற்ற வெற்றியாளர்களுக்கு நடைபெறும் பாராட்டு விழாவில் உரையாற்றிய முதலமைச்சா் மு.க.ஸ்டாலின், கல்விதான் நமக்கான ஆயுதம் என்றும் எந்த இடர் வந்தாலும் கல்வியை கைவிட்டு விடக் கூடாது என்றும் தெரிவித்துள்ளார். யு.பி.எஸ்.சி. தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு பாராட்டுகளையும், மற்றும் வாழ்த்துகளையும் கூறினாா்.

மேலும், விழாவில் பேசிய முதல்வா், “தமிழ்நாட்டுக்கு என்று ஒரு அறிவுமுகம் உள்ளது, ஒரு IAS, IPS அதிகாரி தமிழ்நாட்டு காடர்-ஆக இருந்தால், அவர்களுக்கு மதிப்பே தனி. அதுவும் அவர்கள் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களாக இருந்தால், இன்னும் மதிப்பு கூடும்! கடந்த சில ஆண்டுகளாக UPSC தேர்வுகளில் நம்ம இளைஞர்கள் தேர்ச்சி பெறுவது குறைந்துவிட்டது. ஆனால், இப்போது அந்த கவலையை நீங்கள் போக்கிவிட்டீர்கள்!” என கூறியுள்ளாா்.

 

பஹல்காம் பயங்கரம்! அந்நியப்படும் காஷ்மீர்! தராசு ஷ்யாம் உடைக்கும் உண்மைகள்!

 

MUST READ