spot_imgspot_img
Homeசெய்திகள்கட்டுரைபஹல்காம் பயங்கரம்! அந்நியப்படும் காஷ்மீர்! தராசு ஷ்யாம் உடைக்கும் உண்மைகள்!

பஹல்காம் பயங்கரம்! அந்நியப்படும் காஷ்மீர்! தராசு ஷ்யாம் உடைக்கும் உண்மைகள்!

-

- Advertisement -

பஹல்காம் தாக்குதல் விவகாரத்தில் மத்திய அரசின் பதில் நடவடிக்கைகள் காஷ்மீரை நாட்டு மக்களிடம் இருந்து அந்நியப்படுத்தும் அபாயம் உள்ளதாக மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம் எச்சரித்துள்ளார்.

we-r-hiring

காஷ்மீர் தீவிரவாத தாக்குதல் மற்றும் மத்திய அரசின் பதில் நடவடிக்கைகள் தொடர்பாக தராசு ஷ்யாம் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த நேர்காணலில் கூறி இருப்பதாவது:- எல்லைக்கடந்த பயங்கரவாதம் என்பது ஒரு நிழல் யுத்தமாகும். அதை அனுமதிக்க முடியாது. அந்த நிழல் யுத்தத்தின் விளைவாக அப்பாவி சுற்றுலா பயணிகள் கொல்லப்பட்டிருப்பது கண்டனத்திற்கு உரியதாகும். இதனை உலக நாடுகள் கண்டித்துள்ளன. ஆனால் இதை தாண்டி இந்த விஷயத்தை எப்படி அணுக வேண்டியது என்பதுதான் முக்கியமாகும். நான் 1975-1976ஆம் ஆண்டு காலத்தில் பஞ்சாபில் பணிபுரிந்தேன். அப்போது முன்னாள் குடியரசுத் தலைவர் ஜெயில்சிங் தான் அப்போதைய முதல்வர். நான் செய்த பணியின் காரணமாக முதல்வரை அடிக்கடி சந்திக்க வேண்டி இருந்தது. டரன்டரன் என்று ஒரு ஊர் உள்ளது. அது வறண்ட பூமியாகும். அங்கு நிலத்தைவிட உரம் அதிகளவில் விற்பனையானது. பாகிஸ்தானில் இருந்து வந்து மக்கள் தலைச்சுமையாக உரங்களை வாங்கி செல்வார்கள். வாகா எல்லையை மூடினாலும் அவர்கள் கிராமங்கள் வழியாக வந்து வாங்கி செல்வார்கள். இதை தடுக்க வேண்டியது மத்திய அரசின் பொறுப்பாகும். காஷ்மீரில் மாநில அரசால் நேரடியாக தீவிரவாதிகளை தடுப்பது என்பது சாத்தியம் கிடையாது.

ஆனால் நாம் என்ன மார்தட்டிக் கொள்கிறோம். 370-வது சட்டப்பிரிவை ரத்து செய்தோம். இன்றைக்கு காஷ்மீர் அமைதி பூமி ஆகிவிட்டது. ரொம்ப பாதுகாப்பாக இருக்கிறோம் என்கிற தவறான உணர்வை ஊட்டியாகிவிட்டது. இதனால் உள்நாடு, வெளிநாடுகளில் இருந்து சுற்றுலாப் பயணிகள் வருகிறார்கள். இதை எல்லாம் நம்பி எனது நெருங்கிய நண்பரும், அவரது மலரும் காஷ்மீரில் துலீப் மலர் தோட்டத்தை காண்பதற்காக சென்றிருந்தார்கள். மோடி பக்தர் அவர். அங்கு சென்றுவிட்ட வந்து பயண அனுபவங்களை சொன்னவர்கள் நூறு அடிக்கு ஒரு ராணுவ வீரர் நிற்கிறார்கள். ஆனால் நான் ரொம்ப பாதுகாப்பாக உணர்ந்தேன் என்று சொன்னார். பல்லாயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் ஒரே நேரத்தில் வந்தனர் என்று சொன்னார். நானும் பெரிய அளவில் நிலைமை மாறியுள்ளது என்று எண்ணிக்கொண்டேன். ஆனால் இது தவறான கற்பிதமாகும். இதை நம்பி அவரது உறவினர்கள் யாராவது காஷ்மீருக்கு சென்றிருந்தால், அங்கு மாட்டிக் கொண்டிருப்பார்கள். ஏனென்றால் அங்கே பாதுகாப்பு இல்லை.

அப்போது இந்த சம்பவத்தில் ஈடுபட்ட ஒருசிலர் எல்லைக்கடந்துதான் காஷ்மீருக்குள் வந்திருக்க வேண்டும். நம்மிடம் ஆளில்லா விமானங்கள் உள்ளிட்ட ஏராளமான கண்காணிப்பு முறைகள் உள்ளன. ஆனால் இவர்கள் எல்லைத்தாண்டி பல மணிநேரம் இந்த புல்வெளிக்கு வந்து சேரும் வரை யாருமே அவர்களை கண்டுபிடிக்கவில்லையா? அப்படி என்றால் என்ன உளவுத்துறை கட்டமைப்பு உள்ளது? எல்லாவற்றுக்கும் புலனாய்வுத்துறை உள்ளது. காஷ்மீரே முழுக்க முழுக்க ராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது. காஷ்மீருக்காக நாம் அவ்வளவு செலவு செய்கிறோம். ஆனாலும் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறுகின்றன. இதில் இருக்கும் குறைபாடுகளை சுட்டிக்காட்டினால் தேசத் துரோகி, பிரிவினைவாதிகள் என்றும் பட்டம் அளிக்கிறார்கள். அப்போது நமது தவறுகளை மறைக்கிறோம். அல்லது தேர்தலுக்கு வெற்று அரசியலுக்கு பயன்படுத்துகிறோம். இதை தொடர்ந்து பார்க்கலாம்.

பஹல்காம் தாக்குதலுக்கு பிறகு மத்திய அரசு முறையான நடவடிக்கைகளை எடுத்துள்ளதா? என்றால் இல்லை என்றுதான் சொல்வேன். இந்த தாக்குதல் சம்பவத்திற்கு தார்மிக பொறுப்பேற்று யாராவது ஒருவர் பதவி விலகி இருக்க வேண்டும்.  பாகிஸ்தானில் மூன்று ஏ என்பதுதான் அரசியல். அவை அல்லா, ஆர்மி, அமெரிக்கா ஆகியவையாகும். டிரம்ப் – மோடி நெருங்கிய நண்பர்கள் என்று சொல்கிறார்களே,  ஆனால் பாகிஸ்தானை அவர்கள் கடுமையாக கண்டிப்பார்களா? நாம் நடவடிக்கை எடுத்தால் ஆதரிப்பார்களா? என்றால் கிடையாது. அவர்களது மத்திய கிழக்கு கொள்கைக்கு பாகிஸ்தான் தேவையாகும். இம்ரான்கான் பொதுமக்களின் ஏகோபித்த ஆதரவோடு வெற்றி பெற்றவர். ஆனால் அங்கு ஆட்சி செய்வது ராணுவமாகும். அதேவேளையில் இந்தியா ஜனநாயக நாடாகும். நமக்கு நாட்டு மக்களுக்கு பதில் சொல்ல வேண்டிய பொறுப்பு உள்ளது. இந்தியா முழுவதும் இருந்தும் காஷ்மீருக்கு சுற்றுலா செல்கிறார்கள். இப்போது நாம் எடுக்கிற பல முயற்சிகள் காஷ்மீரை மேலும் அந்நியப்படுத்தும். அங்குள்ள சுற்றுலா தொழில் ஒட்டுமொத்தமாக பாதிக்கப்படும். இனி அரசு என்ன தான் நடவடிக்கைகள் எடுத்தாலும் மக்களுக்கு பாதுகாப்பான மனநிலை வராது.

நாம் எடுக்கும் நடவடிக்கைகளை பாருங்கள் சிந்து நதி ஒப்பந்தம் ரத்து. இது உலகில் உள்ள சிறந்த நதி நீர் ஒப்பந்தங்களில் ஒன்றாக பார்க்கப்படுகிறது. இதற்கு முன்னதாக பாஜக சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை ஆதரித்ததா? என்றால் இல்லை. இதுபோன்ற பிரச்சினை மார்தட்டிக் கொள்ளத்தான் உதவுமே தவிர நிஜமான பிரச்சினையாக மாறாது. வாகா எல்லையை அடைத்துள்ளனர். அதன் வழியாக போக்குவரத்து நடைபெறாது. ஆனால் பாகிஸ்தானில் உள்ள சின்ன சின்ன கிராமங்கள் வழியாக இந்தியாவுக்குள் வருகிறவர்கள், போகிறவர்கள் நிலை என்ன? பிறகு ஏன் போதைப் பொருள் கடத்தலை தடுக்க முடியவில்லை. இது யாருடைய பொறுப்பாகும். இந்தியாவில் 2 எல்லைப்பகுதிகள் உள்ளன. ஒன்று சர்வதேச எல்லையாகும். அது வாகா எல்லை. மற்றொன்று எல்லைக்கட்டுப்பாட்டு கோடு பகுதியாகும். அதுதான் காஷ்மீரில் உள்ளது. பயங்கரவாதிகள் சிகரப்பகுதிகளில் உள்ளனர். எல்லைக் கோட்டை தாண்டி இந்தியாவுக்குள் வருகின்றனர்.

நான் பார்த்த வங்கதேசப் போரில், இரண்டு பாகிஸ்தான்கள் இருந்தன. இரண்டு பகுதிகளுக்கும் இடையே மிகப்பெரிய நிலப்பரப்பு இருந்தது. வங்கதேசத்தில்  வங்கமொழி அழிகிறது என்ற உணர்வு ஏற்பட்டது. வங்க மக்கள் நசுக்கப்படுவதாக நினைத்தார்கள். இந்தியாவுக்கு அங்கிருந்து ஏராளமான அகதிகள் வந்தார்கள். அதன் பிறகு பிரதமர் இந்திரா காந்தி எடுத்த நடவடிக்கை காரணமாக வங்கதேசம் பிறந்தது. ஆனால் அந்த வங்கதேசம் இன்றைக்கு நமக்கு எதிராக உள்ளது. பாகிஸ்தான்காரன் இன்றைக்கு என்ன சொல்கிறார்கள். உங்களுடைய தவறு தான் இந்த உணர்வுகளுக்கு காரணம். நீங்கள் ஏன் வக்பு சட்டம் கொண்டு வந்தீர்கள் என்று கேட்கிறார்கள். வங்கதேச போர் தொடங்கிய உடன் நாம் வான்வழி பகுதியை தான் தடை செய்தோம். தற்போது பாகிஸ்தான் தங்களது வான்பரப்பை பயன்படுத்த தடை விதித்துள்ளார்கள். இதனால் பாதிக்கப்படுபவர்கள் இந்தியாதான். ஏனென்றால் மேற்கத்திய நாடுகளுக்கோ, சில அரேபிய நாடுகளுக்கு செல்லவோ பிரதான வழியாகும். இதனால் இந்தியாவுக்குதான் அன்றாட பாதிப்பாகும், இவ்வாறு அவர் தெரிவித்தார்.

MUST READ