கொடுத்த வாக்குறுதிகளை எல்லாம் நிறைவேற்றிக் கொண்டிருக்கும் நிலையில் 2026 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலில் 234 தொகுதிகளில் வெற்றி பெற்றாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை என்று முதலமைச்சர் மு.க ஸ்டாலின் கூறியுள்ளாா்.சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுகவைச் சேர்ந்த மயிலாப்பூர் சட்டமன்ற உறுப்பினர் மயிலை வேலுவின் இல்லத் திருமணத்தை முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் திருமண நடத்தி வைத்து சிறப்புரையாற்றினார். திருமண விழாவில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உட்பட, மூத்த அமைச்சர்களும் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினார். அப்போது பேசிய துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், 2021 சட்டமன்ற தேர்தலில் ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களும் தலைவருக்கு வாக்களித்த நிலையில் தலைவர் வேலுக்கு வாக்களித்தார். எங்க மாவட்ட செயலாளரும் அவர் தான் என்று கூறி மணமக்களை வாழ்த்தினார்.
இதைத்தொடர்ந்து சிறப்புரையாற்றிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், குடும்ப பாசத்துடன் தான் இந்த நிகழ்வில் பங்கேற்று அனைவரும் வாழ்த்திக் கொண்டிருக்கிறார்கள். நான் மட்டுமல்ல எனது குடும்பமே மயிலை வேலுக்கு தான் ஓட்டு போட்டுள்ளோம். எங்களுக்கும் மாவட்ட செயலாளரும் மயிலை வேலு தான் என்றார். ஊர்ந்து கொண்டிருந்த தமிழ்நாடு தற்போது நிமிர்ந்து கொண்டிருப்பதாக சட்டப்பேரவையில் தெரிவித்தேன். இதற்கு எதிர்க்கட்சித் தலைவர் எழுந்து ஊர்ந்து என்பதை அவை குறிப்பில் இருந்து நீக்க வேண்டும் என தெரிவித்தார். அதற்கு தவழ்ந்து என்று மாற்றிக் கொள்ளுமாறு பேரவையில் கூறினேன்.
ஒரு மாத காலத்திற்கும் மேலாக சட்டமன்ற கூட்டம் நடந்து முடிந்துள்ளது. மற்ற மாநிலத்திற்கு எல்லாம் அல்ல, நாட்டிற்கே, உலகத்திற்கே வழிகாட்டக்கூடிய சிறப்பான ஆட்சியை நாம் நடத்திக் கொண்டிருக்கிறோம். தேர்தல் நேரத்தில் என்னென்ன உறுதிமொழிகளை வாக்குறுதிகளை கொடுத்தோமோ, அந்த வாக்குறுதிகளை நிறைவேற்றிக் கொண்டிருக்கிறோம். தற்போது கொடுத்த வாக்குறுதியையும் நிறைவேற்றுவோம். சிலர் பேசும்போது கூட இங்கு சொன்னார்கள், 200 இல்லை 220 தொகுதிகளில் வெற்றி பெறும் என்று தெரிவித்தனர். நான் கொடுத்த வாக்குறுதிகளை எப்படி நடைமுறைப்படுத்திக் கொண்டிருக்கிறோம் என்பது உங்களுக்கு நன்றாக தெரியும். 2026 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலில் 234 தொகுதிகளிலும் வெற்றி பெற்றால் ஆச்சரியப்படுவதற்கு இல்லை என்றார்.
நான் ஒவ்வொரு மாவட்டத்திற்கு செல்லும் போதும் மக்கள் திரண்டு வரக்கூடிய காட்சிகளை பார்க்கும் பொழுது, மெய்சிலிர்த்து போகிறேன். ஆகவே நிச்சயமாக உறுதியாக நம்மை எதிர்க்கக் கூடியவர்கள், எந்த நிலையில் வந்தாலும் சரி, எப்படிப்பட்ட கூட்டணி வைத்துக் கொண்டு வந்தாலும் சரி, ஒரு கை பார்ப்போம். நாம் நம் கடமையாற்றிக் கொண்டிருக்கிறோம். எதைப் பற்றியும் கவலை பட வேண்டிய அவசியம் இல்லை. அமலாக்கத்துறை சிபிஐ வைத்து மிரட்டினாலும் சரி, எதைப் பற்றியும் கவலைப்படாமல் நெருக்கடியை பார்த்து வளர்ந்திருக்க கூடியவர்கள் நாம்.
மணமகளின் பெயர் தமிழில் இல்லை என்றாலும் மணமக்களுக்கு பிறக்கப் போகும் குழந்தைகளுக்கு தமிழில் பெயர் வைக்க வேண்டும் என தெரிவிக்கிறேன் என்றும் முதலமைச்சர் கூறினார். திருமண விழாவில் மணமக்களை வாழ்த்த மயிலாப்பூர் மாதவ பெருமாள் கோவிலில் இருந்து வந்த பூமாலை கொண்டுவரப்பட்டது. மயிலாப்பூர் சட்டமன்ற உறுப்பினர் த.வேலுவின் இல்ல திருமண விழாவில் நாடாளுமன்ற உறுப்பினரும் துணைப் பொதுச் செயலாளரான கனிமொழி மணமக்களை வாழ்த்தினார். இதே போல பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார். மணமக்களை வாழ்த்தி விட்டு புறப்பட்ட வானதி சீனிவாசன் எதிரே வந்த கனிமொழியை சந்தித்து பரஸ்பரம் நலம் விசாரித்தார்.
உழைப்புச் சுரண்டலுக்கெதிராக, தொழிலாளி வர்க்கம் அணி திரள வேண்டும் – மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி