spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சென்னைசென்னை பள்ளிகளில் விளையாட்டு மேம்பாட்டிற்கு 2.34 கோடி ஒதுக்கீடு!

சென்னை பள்ளிகளில் விளையாட்டு மேம்பாட்டிற்கு 2.34 கோடி ஒதுக்கீடு!

-

- Advertisement -

சென்னை மாநகராட்சி பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் விளையாட்டுத் திறனை மேம்படுத்தும் வகையில் 141 உடற்கல்வி ஆசிரியர்களை பணியமர்த்தி, அவர்களது மாத ஊதியத்திற்காக 2.34 கோடி ஒதுக்கீடு செய்து மன்றக் கூட்டத்தில் தீர்மானம்.சென்னை பள்ளிகளில் விளையாட்டு மேம்பாட்டிற்கு 2.34 கோடி ஒதுக்கீடு!2025-26ம் கல்வி ஆண்டில், 69 நடுநிலைப் பள்ளிகள், 72 உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியர்களின் விளையாட்டுத் திறனை மேம்படுத்த, தற்காலிக உடற்கல்வி ஆசிரியர்கள்  நடுநிலைப் பள்ளிகளுக்கு மாதம் 15,000 ரூபாய், உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளுக்கு மாதம் 18 ஆயிரம் ரூபாய் என்ற வகையில் மொத்தம் 142 உடற்கல்வி ஆசிரியர்கள் பணியமர்த்த அனுமதிக்கப்பட்டுள்ளது. ஆசிரியர்கள் மாத ஊதியத்திற்கான மொத்தம் ரூபாய் 2.34 கோடி ஒதுக்கீடு செய்ய தீர்மானம்.

மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் – மேயர் பிரியா

MUST READ