spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுமருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் - மேயர் பிரியா

மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் – மேயர் பிரியா

-

- Advertisement -

சென்னை மாநகராட்சி கீழ் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு விரைவில் 120 மருத்துவர்கள் பணியமர்த்தப்பட உள்ளனர் என மேயர் பிரியா தெரிவித்துள்ளார்.மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் - மேயர் பிரியாஇன்றைய மாமன்ற கூட்டத்தில் வார்டு 43 மாமன்ற உறுப்பினர் பவித்ரா நரேஷ்குமார் பேசும் போது, தனது மண்டலத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாராத நிலையத்தில் போதுமான மருத்துவர்கள் இல்லை. அப்படியே இருந்தாலும் அவர்கள் காலதாமதமாக தான் வருகிறார்கள் என தெரிவித்தார். அதற்கு பதில் அளித்த பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் பிரியா,மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் - மேயர் பிரியாநீங்கள் மருத்துவர்கள் இல்லை என கூறியதை ஆணையாளர் நோட் செய்து விட்டார். உடனே நடவடிக்கை எடுப்பார் எனவும் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு காலதாமதமாக வருகை புரியும் மருத்துவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கூறினார். மேலும்சென்னை மாநகராட்சி கீழ் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு விரைவில் 120 மருத்துவர்கள் பணியமர்த்தப்பட உள்ளனர் என மேயர் பிரியா தெரிவித்தார்.

சட்ட விரோதமாக தங்கியுள்ளவர்களை வெளியேற்ற வேண்டும் – உள்துறை செயலாளர்

MUST READ