spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சென்னைமாணவர்களை மீட்க அரசு நிச்சயமாக நடவடிக்கை எடுக்கும்-துணை முதல்வர் பேட்டி

மாணவர்களை மீட்க அரசு நிச்சயமாக நடவடிக்கை எடுக்கும்-துணை முதல்வர் பேட்டி

-

- Advertisement -

காஷ்மீரிலுள்ள மாணவர்களை மீட்டு வருவதற்கு தமிழ்நாடு அரசு நிச்சயமாக நடவடிக்கை எடுக்கும் என்று துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளாா்.மாணவர்களை மீட்க அரசு நிச்சயமாக  நடவடிக்கை எடுக்கும்- துணை முதல்வர் பேட்டிசென்னை, சேப்பாக்கம் திருவல்லிக்கேணி சட்டமன்ற தொகுதியில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்றார். முதலாவதாக இராயப்பேட்டை, பைகிராப்ட்ஸ் சாலையில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் சார்பில், 12.37 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 3 தளங்களுடன் கூடிய பல்நோக்கு மையம், 1.87 கோடி ரூபாய் மதிப்பீட்டில் திருவல்லிக்கேணி ஜானி பாட்ஷா தெருவில் முதல்வர் படைப்பகம் மற்றும் நவீன நூலகம், பாரதி சாலையில் 1.37 கோடி ரூபாய் மதிப்பீட்டில் முதல்வர் படைப்பகம் மற்றும் நவீன நூலகம் கட்டும் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.

இதனை தொடர்ந்து இந்து சமய அறநிலையத் துறையின் சார்பில் சேப்பாக்கம்  கஸ்தூரிபாய் காந்தி மகப்பேறு மருத்துவமனை எதிரில் சைடோஜி தெருவில், அருள்மிகு பார்த்தசாரதி திருக்கோயில் இடத்தில் 77.50 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 3 குடியிருப்புகள் கட்டடத்தை திறந்து வைத்தார்.மாணவர்களை மீட்க அரசு நிச்சயமாக  நடவடிக்கை எடுக்கும்- துணை முதல்வர் பேட்டிஅப்போது, காஷ்மீரில் படிக்கும் மாணவர்கள் தங்களை மீட்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தது தொடர்பாக செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், மாணவர்களை அழைத்து வருவதற்கான நடவடிக்கையை தமிழ்நாடு அரசு நிச்சயமாக மேற்கொள்ளும் என்று பதிலளித்துள்ளாா்.

we-r-hiring

இதன் பின்னர் திருவல்லிக்கேணி, மகாகவி பாரதியார் இல்லம் அருகில், டி.பி.கோயில் தெருவில், 3 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 12 குடியிருப்புகள் கட்டடம் மற்றும் 1 கோடி ரூபாய்  மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 9 குடியிருப்புகள் கட்டடம், ஆகியவற்றை திறந்து வைத்து, 12 திருக்கோயில் பணியாளர்களுக்கு குடியிருப்பு ஆணைகளை வழங்கினார். இந்த நிகழ்வுகளில் அமைச்சர் சேகர்பாபு, நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதிமாறன், மாநகராட்சி மேயர் பிரியா உட்பட சட்டமன்ற உறுப்பினர்கள் அரசு அதிகாரிகள் பங்கேற்றனர்.

எரிபொருட்கள் போதுமான அளவு கையிருப்பு உள்ளதாக இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவிப்பு!

MUST READ