Homeசெய்திகள்சென்னைசென்னையில் அதிகாலை முதல் விட்டு விட்டு மழை..

சென்னையில் அதிகாலை முதல் விட்டு விட்டு மழை..

-

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று அதிகாலையில் லேசான மழை பெய்தது.

தமிழ்நாட்டில் கடந்த சில தினங்களாக மழை பெய்து வருகிறது. தென்னிந்திய பகுதிகளில் மேல் நிலவும் வளிமண்டலத்தின் கீழ் அடுக்குகளில் கிழக்கு திசை காற்றும், மேற்கு திசை காட்டும் சந்திப்பதால் மழை பெய்வதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. இதன்காரணமாக கடந்த சில நாட்களாகவே சென்னை உள்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மிதமானது முதல் பலத்த மழை பெய்து வருகிறது.

சென்னையில் அதிகாலை முதல் விட்டு விட்டு மழை..

சென்னையை பொருத்தவரையில் கடந்த 3 நாட்களாக லேசானது முதல் மிதமான மழை பெய்து வந்தது. இந்த நிலையில் இன்று நள்ளிரவு முதல் அதிகாலை வரையில் சில இடங்களில் கனமழையும், ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மலையும் விட்டு விட்டு பெய்தது. தொடர்ந்து லேசான சாரல் மழை பெய்து வருகிறது.

அதன்படி புரசைவாக்கம், புளியந்தோப்பு, வியாசர்பாடி உள்ளிட்ட பகுதிகளில் இடி மின்னலுடன் கனமழையும், வடபழனி, சாலிகிராமம், விருகம்பாக்கம், நுங்கம்பாக்கம், ஆவடி, அம்பத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் மிதமான மழையும் பெய்துள்ளது. அதேபோல அண்ணா சாலை, சேப்பாக்கம் திருவல்லிக்கேணி,தேனாம்பேட்டை, மந்தவெளி, மயிலாப்பூர், பட்டினம்பாக்கம், அடையாறு உள்ளிட்ட இடங்களில் விட்டு விட்டு லேசான சாரல் மழை பெய்து வருகிறது.

MUST READ