சென்னை பெரம்பூர் ரயில் நிலையம் நடைமேடை அருகில் முட்புதரில் கிடந்த 3 மாத பெண் குழந்தை மீட்பு. ஆட்டோ ஓட்டுநர்கள் குழந்தையை மீட்டு சென்னை பெரம்பூர் இரும்பு பாதை காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.
சென்னை பெரம்பூர் ரயில் நிலையம் நடைமேடை எண் 01-ல் முரசொலி மாறன் மேம்பாலம் அருகிலுள்ள புதர் பகுதியில் குழந்தை அழுவது போல் சத்தம் கேட்டுள்ளது.

உடனடியாக இந்த சத்தத்தை கண்டறிந்த அங்கு இருக்கக்கூடிய ஆட்டோ ஓட்டுனரான காசிநாதன், முரளி, ரஜினி ஆகியோர் செல்போன் டார்ச் லைட் மூலமாக புதர் பகுதியில் சென்று பார்த்த பொழுது ஒரு பையில் குழந்தை பால் டப்பாவுடன் துணியால் சுற்றி கிடைப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர் உடனடியாக முள் புதரில் சிறிய காயங்களுடன் குழந்தையை மீட்டெடுத்த ஆட்டோ ஓட்டுநர்கள் பெரம்பூர் இருப்பதை காவல் நிலையத்தில் கொண்டு வந்து ஒப்படைத்துள்ளனர்.
பின்னர் குழந்தையை பரிசோதித்த இரும்பு பாதை போலீசார் பிறந்த மூன்று மாதங்களான பெண் குழந்தை என்பதும் தெரியவந்தது. இதனை அடுத்து இரவு நேரம் என்றும் பாராமல் குழந்தைக்கு உடனடியாக சிகிச்சை அளிக்கப்பட்டு சென்னை வில்லிவாக்கம் குழந்தைகள் உதவி மையம்-1098 தகவல் தெரிவிக்கப்பட்டு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது.
குழந்தையை வள்ளுவர் கோட்டத்தில் உள்ள பாலமந்திர் குழந்தைகள் காப்பகத்தில் சேர்ப்பதற்காக எடுத்துச் சென்றுள்ளனர். இரவு நேரத்தில் முள் புதரில் கிடந்த குழந்தை மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


