- Advertisement -
திருவல்லிக்கேணி காவல் நிலைய உதவி ஆய்வாளர் சாலை விபத்தில் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணியாற்றி வந்தவர் தேசிங்கு ராஜா (வயது 56). இவர் இருசக்கர வாகனத்தில் பின்னால் அமர்ந்து காவல் நிலையம் நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது தினேஷ் என்பவர் தனது KTM பைக்கில் அதிவேகமாக வந்துள்ளார். எதிர்பாராத விதமாக தினேஷின் பைக் மோதியதில் பின்னால் அமர்ந்து சென்ற தேசிங்கு ராஜா கீழே விழுந்து பலத்த காயமடைந்தார்.
உடனடியாக ஓமந்தூரார் தோட்டம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து அண்ணா சதுக்கம் போக்குவரத்து புலனாய்வு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். காவல் உதவி ஆய்வாளர் விபத்தில் உயிரிழந்த சம்பவம் சக காவலர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.