தமிழக வெற்றிக் கழக மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் சென்னை பனையூரில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் பொதுச்செயலாளர் ஆனந்த் தலைமையில் நடைபெற்று வருகிறது.
தவெகவின் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் பங்கேற்காத விஜய். ஆனந்த் தலைமையில் தவெக மாவட்ட செயலாளர்கள், அணி தலைவர்கள் ஆலோசனை கூட்டம்.
புதிதாக தேர்வு செய்யப்பட்டுள்ள மாவட்ட செயலாளர்களுக்கு அழைப்பு. 28 சார்பு அணிகளின் மாநில, மாவட்ட தலைவர்கள், நிர்வாகிகளுக்கு அழைப்பு. கட்சியின் உள்கட்டமைப்பு, நிர்வாகிகள் நியமனம் குறித்து ஆலோசனை. 100 மாவட்ட செயலாளர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. 4 மாதங்களாக வாக்கெடுப்பு முறையில் நடைபெற்ற தேர்வு.
மாவட்ட செயலாளர் அதிகாரபூர்வ பட்டியல் இதுவரை வெளியாகாத நிலையில் தேர்வு செய்யப்பட்டுள்ள மாவட்ட செயலாளர்களுடன் ஆலோசனை கூட்டம். 28 சார்பு அணிகளின் மாநில, மாவட்ட நிர்வாகிகள் பட்டியலும் இன்று இறுதி செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன..