பார்கவுன்சில் தேர்தலை நடத்தவிடாமல் தள்ளி வைப்பதற்கான நடவடிக்கை தற்போதைய தமிழ்நாடு பார்கவுன்சில் நிர்வாகிகள் மேற்கொண்டு வருவதாக வழக்கறிஞர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார்கவுன்சில் தேர்தல் இரண்டு ஆண்டுகளாக நடத்தப்படாமல் இருப்பது குறித்து வழக்கறிஞர்கள் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளனர். சென்னை உயர் நீதிமன்றத்தில் செய்தியாளர்களை சந்தித்த,பார்கவுன்சில் உறுப்பினர் வேல்முருகன், ”தமிழ்நாடு புதுச்சேரி பார்கவுன்சில் தேர்தல் கடந்த 2 ஆண்டுகளாக நடத்தப்படாமல் இருப்பதாகவும், வரும் 2026 ம் ஆண்டு ஏப்ரல் 30 ம் தேதிக்குள் தேர்தலை நடத்தி முடிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருப்பதையும் சுட்டிக்காட்டினார்.

ஆனால் தற்போதைய பார்கவுன்சில் நிர்வாகம், பார்கவுன்சில் தேர்தலை நடத்தி முடிக்காமல் தள்ளி வைப்பதற்கான நடவடிக்கை ஈடுப்பட்டு வருவதாக குற்றஞ்சாட்டியுள்ளார்.
இதன் பகுதியாக, தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து வழக்கறிஞர் சங்கங்களுக்கும் “Certificate of Practice” அனுப்ப வேண்டும் என்ற சுற்றறிக்கையை பார்கவுன்சில் வெளியிட்டிருப்பது தேர்தல் தாமதத்திற்கான முயற்சியின் ஓர் அங்கமே என வேல்முருகன் தெரிவித்தார். இச்சுற்றறிக்கையை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
இது தொடர்பாக தேர்தலை நடத்துவதற்கு நியமிக்கப்பட்ட ஓய்வுப்பெற்ற நீதிபதியிடம் புகார் அளித்திருப்பதாகவும், இல்லையென்றால் தற்போதைய பார்கவுன்சில் நிர்வாகிகளுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வழக்கு தொடர இருப்பதாகவும் வழக்கறிஞர் வேல்முருகன் தெரிவித்துள்ளார்.
தீபத்தூண் விவகாரம்…ஆறாவது நாளாக பக்தர்களுக்கு மலை ஏறும் அனுமதி மறுப்பு…


