spot_imgspot_img
Homeசெய்திகள்சென்னைவருமானத்தை மறைத்ததால் விஜய்க்கு ரூ.1.50 கோடி அபராதம்!! சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி….

வருமானத்தை மறைத்ததால் விஜய்க்கு ரூ.1.50 கோடி அபராதம்!! சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி….

-

- Advertisement -

விஜய்க்கு விதிக்கப்பட்ட அபராதம் ரூ.1.50 கோடி அபராதத்தை உறுதி செய்து சென்னை உயா்நீதிமன்றம் தீா்ப்பளித்துள்ளது.வருமானத்தை மறைத்ததால் விஜய்க்கு ரூ.1.50 கோடி அபராதம்!!  சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி….
வரி ஏய்ப்பு செய்ததற்காக விஜய்க்கு விதித்த ரூபாய் 1.50 கோடி அபராதத்தை உறுதி செய்து சென்னை உயா்நீதிமன்றம் தீா்ப்பளித்துள்ளது. 2022 ஜூன் 30-ல் பிறப்பிக்கப்பட்ட உத்தரவை எதிா்த்து சென்னை உயா்நீதிமன்றத்தில் விஜய் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. புலி படத்திற்கு வாங்கிய ரூ.1.5 கோடி சம்பளத்தை கணக்கில் காட்டாமல் வாி ஏய்ப்பு செய்ததாக 2022-ல் ரூ.1.50 கோடியை வருமான வரித்துறை அபராதம் விதித்திருந்தது.  வழக்கை விசாாித்த சென்னை உயா்நீதிமன்றம் விஜய் மீதான தீா்ப்பை  தேதி குறிப்பிடாமல் வழக்கை ஒத்தி வைத்திருந்தது.

இந்நிலையில் ஆவணங்களை வருமான வரித்துறை ஆய்வு செய்த போது ரூ.1.5 கோடிவருமானத்தை கணக்கில் காட்டாதது கண்டுபிடிக்கப்பட்டது. வருமானத்தை மறைத்ததாக கூறி விஜய்க்கு வருமான வரித்துறை இந்த அபராதத்தை விதித்துள்ளது.  இதனை எதிா்த்து விஜய் தாக்கல் செய்த மனுவை நீதிபதி செந்தில்குமாா் ராமமூா்த்தி தள்ளுபடி செய்து அதிரடி தீா்ப்பு வழங்கினாா்.

we-r-hiring

மேலும், விஜய்க்கு ரூ.1.50 கோடி அபராதம் விதிக்கப்பட்டதில் எந்த தவறும் இல்லை என்றும் கருத்து தெரிவித்துள்ளாா். குறிப்பிட்ட கால வரம்பிற்குள் தான் வருமானத் வரித்துறை  அபராதம் விதித்துள்ளது என சென்னை உயா்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. காலவரம்பை தவிா்த்து எஞ்சிய அம்சங்கள் தொடா்பாக வருமான வரி மேல் முறையீட்டு ஆணையத்திடம் விஜய் முறையிடலாம் எனவும் சென்னை உயா்நீதிமன்றம் தொிவித்துள்ளது.

‘ஜனநாயகன்’ ரிலீஸ் தேதி … மகிழ்ச்சியில் விஜய் ரசிகர்கள்…

MUST READ