spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சென்னைஆவடி அருகே பெட்ரோலில் தண்ணீர் கலப்படம்.. பெட்ரோல் பங்கை முற்றுகையிட்ட மக்கள்..

ஆவடி அருகே பெட்ரோலில் தண்ணீர் கலப்படம்.. பெட்ரோல் பங்கை முற்றுகையிட்ட மக்கள்..

-

- Advertisement -

திருமுல்லைவாயல் சி டி எச் சாலையில் உள்ள நயாரா பெட்ரோல் பங்கில் தண்ணீர் கலப்படம் கலந்த பெட்ரோலை போட்டதால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமத்துக்குள்ளானர்.

ஆவடி அடுத்து திருமுல்லைவாயல் பகுதி நயாரா பெட்ரோல் பங்கில், பெட்ரோலில் தண்ணீர் கலப்படம்.ஆவடி அடுத்த திருமுல்லைவாயல் பகுதியில் நயாரா பெட்ரோல் பங்க் அமைந்துள்ளது. இங்கு தண்ணீர் கலந்த பெட்ரோல் போடப்படுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். தண்ணீர் கலந்த பெட்ரோல் போட்டதால் வாகனத்தில் இன்ஜின் கோளாறு ஏற்பட்டு குழந்தைகளுடன் நடுத்தெருவில் நின்றதாக அப்பகுதியை சேர்ந்த நரிக்குறவர் இனத்தைச் சேர்ந்த பீட்டர் என்பவர் தெரிவித்திருக்கிறார்.

பீட்டர்

இதுகுறித்து பங்க்  மேற்பார்வையாளரிடம் கேட்டதற்கு , ‘நரிக்குறவர்களுக்கு இங்கே இனிமேல் பெட்ரோல் கிடையாது’ என அவர்கள் மிகக் கடுமையாக கூறி விரட்டியுள்ளனர்.

we-r-hiring

மேலும் பணியாளர்களும் பொதுமக்கள் கேட்டதற்கு முறையான பதில் கூறவில்லை என்று கூறப்படுகிறது. அத்துடன் ‘விருப்பம் இருந்தால் போடவும் இல்லையேல் கிளம்பவும்’ என்று அலட்சியமாக பதில் கூறுவதாக தெரிவிக்கின்றனர்.பெட்ரோல் பங்கில் தண்ணீர் கலந்த பெட்ரோல் மற்றும் டீசல் போட்டதால் வாகனங்கள் பழுதடைந்த நிலையில் உள்ளது.

ஆவடி அடுத்து திருமுல்லைவாயல் பகுதி நயாரா பெட்ரோல் பங்கில், பெட்ரோலில் தண்ணீர் கலப்படம்.தண்ணீர் கலந்த பெட்ரோல் மற்றும் டீசல் வினியோகம் செய்வதால் திருமுல்லைவாயல் பொதுமக்களுக்கும் பங்கில் பணிபுரிவர்களுக்கும் இடையே பெரும் வாக்குவாதம் ஏற்பட்டதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

MUST READ