Homeசெய்திகள்சென்னைதிருவான்மியூரில் இருந்து அக்கரை வரை இசிஆர் அகலப்படுத்தும் பணி வேகமாக நடைபெற்று வருகிறது

திருவான்மியூரில் இருந்து அக்கரை வரை இசிஆர் அகலப்படுத்தும் பணி வேகமாக நடைபெற்று வருகிறது

-

திருவான்மியூரில் இருந்து அக்கரை வரை இசிஆர் அகலப்படுத்தும் பணி வேகமாக நடைபெற்று வருகிறதுசென்னை திருவாமியூரில் இருந்து அக்கரை வரையில் 10 கிலோ மீட்டர் தூரம் ஆறு வழிச்சாலையாக மாற்றுவதற்காக பணிகள் விரைவாக நடைபெற்று வருகிறது.

15 ஆண்டுகளுக்கும் மேலாக நிலம் கையகப்படுத்துவதில் உள்ள சிக்கல்களால் பணிகள் முடியவடையாமல் உள்ளது. இப்பணிகள் எப்போது முடிவடையும் என அப்பகுதி மக்கள் கேட்டுவருகின்றனர்.

சென்னையின் வளர்ச்சியை கருத்தில் கொண்டு சாலை விரிவாக்க பணிகளும், பாலங்கள், மேம்பாலங்களும் கட்டப்பட்டு வருகிறது. ஐடி தொழிலில் சார்ந்த நிறுவனங்கள் ராஜீவ் காந்தி சாலை தொடர்ந்து, கிழக்கு கடற்கரை சாலை, பழைய மகாபலிபுரம் சாலைகள் இருக்கும் பகுதிகளில் அதிகளவில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் பாண்டிச்சேரி, கடலூர், சிதம்பரம், நாகப்பட்டினம் போன்ற மாவட்டங்களுக்கு செல்வதற்கான பிரதான சாலையாக கிழக்கு கடற்கரை அமைந்துள்ளது. இச்சாலையில் செல்லும் வாகனங்களில் எண்ணிக்கையும் அதிகரித்து உள்ளது.

இந்த சாலையின் பயன்பாடு அதிகரிக்க கிராம சாலையாக இருந்த நிலையில் நான்கு வழி சாலையாக மாற்றம் செய்யப்பட்டது. இதை தொடர்ந்து ஆறு வழி சாலையாக மாற்றுவதற்கு கடந்த 2006 ஆண்டு திட்டமிடப்பட்டது. ஆனால் நிலத்தை கையகப்பபடுத்துவதில் ஏற்பட்ட சிக்கல்களால் தற்போது வரை பணிகள் முடிவு பெறாமல் இருக்கிறது. கடற்கறை சாலை விரிவாக்க திட்டத்தை கடந்த 2006 ம் ஆண்டு தொடங்கிய போது திட்டத்தின் மதிப்பு 159 கோடியாக இருந்தது. தற்போது 85 சதவீதம் உயர்ந்து 1100 கோடியாகியுள்ளது.

2012 ஆம் ஆண்டு 356 கோடியாகவும், 2019 ஆம் ஆண்டு 756 கோடியாகவும், 2023 ஆம் ஆண்டு 940 கோடியாக உயர்ந்தது. ஒரு கிலோ மீட்டருக்கு நிலத்தை கையகப்படுத்துவதற்கு 106 கோடி ரூபாய் செலவாகும் என்று கணிக்கப்பட்டது. இந்த நிலையில் 2025 ஆண்டுக்குள் திருவான்மியூரில் இருந்து அக்கரை ஆறு வழிச்சாலையாக விரிவாக்க பணிகளை முடிக்க மாநில நெடுஞ்சாலை துறை திட்டமிட்டுள்ளது.

திருவான்மியூரில் இருந்து அக்கரை வரை 10.5 கிலோ மீட்டர் தூரத்தை ஆறு வழிச்சாலையாக மாற்றப்படவுள்ளது. இதற்காக நில உரிமையாளர்களிடம் கருத்து கேட்பு கூட்டங்கள் பல முறை நடத்தியும், கிராம நத்தம் புறம்போக்கு, பட்டா உள்ளவர்கள் கணக்கிட்டு நிலத்தின் உரிமையாளர்களுக்கு பணம் கொடுக்கப்பட்டு வந்தது. கொட்டிவாக்கம், பாலவாக்கம் போன்ற பகுதிகளில் நிலம் கையகப்படுத்தப்பட்டாலும் திருவான்மியூரில் நிலம் எடுக்கப்படாமல் இருந்தது.

இந்நிலையில் திருவான்மியூர் பகுதியில் நிலம் உரிமையாளர்களுக்கு பணம் வழங்கப்படுவதால் விரிவாக்கத்திற்கு தேவையான நிலத்தில் உள்ள கட்டிடங்களை இடித்து ஒப்படைத்து வருகின்றனர் . இதே போல மற்ற பகுதிகளான கொட்டிவாக்கம், பாலவாக்கம், நீலாங்கரை, ஈஞ்சம்பாக்கம், அக்கரை வரையில் சாலையின் இருபுறங்களும் நிலம் கையகப்படுத்தும் பணிகள் விரைவாக நடைபெற்று வருகிறது.

பிறப்பு சான்றிதழில் 15 ஆண்டுகளாக பெயர் சேர்க்காதவர்கள் வரும் டிசம்பருக்குள் பெயர் சேர்க்க வாய்ப்பு என அறிவிப்பு !!

திருவான்மியூரில் இருந்து சோழிங்கநல்லூர் வரையிலும் நான்கு வழி சாலையாக இருந்தாலும் கூட பணிக்கு செல்லக்கூடிய காலை மாலை நேரங்களில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதே போல பண்டிகை காலங்களில் நாகை, கடலூர், சிதம்பரம் போன்ற மாவட்டங்களுக்கு செல்பவர்கள் எண்ணிக்கையும் அதிகரிக்கும் போது பல மணி நேரங்களில் போக்குவரத்து நெரிசலில் சிக்கும் நிலையும் உள்ளது. இவை அனைத்தையும் கருத்தில் கொண்டே நிலம கையகப்படுத்தும் பணிகள் இனியும் தாமதம் ஆகாமல் விரைந்து முடிக்க திட்டமிடப்படுள்ளது. பொதுமக்களும் இந்த விரிவாக்க பணிகளை விரைவாக முடித்தால் சிரமம் இன்றி சென்று வருவதற்கு வாய்ப்பாக அமையும் என்று அப்பகுதி மக்கள் மற்றும் வழிப்போக்கர்கள் கூறுகிறார்கள்.

இந்த பணிகள் ஒரு புறம் இருக்க, தேசிய நெடுஞ்சாலைகள் துறையும் மாமலல்லபுரத்தில் இருந்து கன்னியாகுமரி வரையிலும் 4 வழி சாலையாக மாற்றுவதற்கு சுமார் 24 ஆயிரம் கோடி மதிப்பிட்டில் பணிகளும் நடைபெற்று வருகிறது. இந்த சாலை விரிவாக்க பணிகளும் முடிவறும்போது, சென்னையில் இருந்து கன்னியாகுமரி வரை விரைவான பயணத்தை மேற்கொள்வதற்கு வாய்ப்பாக அமையும் என தெரிவிக்கின்றனர்.

MUST READ