விஜய் ஆண்டனி நடிக்கும் லாயர் படத்தில் பிரபல நடிகை ஒருவர் இணைந்து இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமாகி தற்போது தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் பிஸியாக நடித்து வருபவர் விஜய் ஆண்டனி. அந்த வகையில் இவரது நடிப்பில் உருவாகியுள்ள வள்ளி மயில், சக்தித் திருமகன், மார்கன் ஆகிய படங்கள் அடுத்தடுத்து ரிலீஸாக இருக்கின்றன. இதற்கிடையில் இவர், கடந்த மார்ச் மாதம் திரைக்கு வந்த ஜென்டில்வுமன் படத்தின் இயக்குனர் ஜோஸ்வா சேதுராமன் இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடிப்பதற்கு கமிட்டாகியுள்ளார். அதன்படி விஜய் ஆண்டனியின் 26 ஆவது படமாக உருவாக இருக்கும் புதிய படத்தினை விஜய் ஆண்டனியே தயாரிக்கிறார். லாயர் என்று தலைப்பு வைக்கப்பட்டிருக்கும் இந்த படமானது நீதிமன்ற பின்னணியில் ஒரு வித்தியாசமான வழக்கை மையமாக வைத்து தயாராக இருக்கிறது. இதில் விஜய் ஆண்டனி வழக்கறிஞராக நடிக்கிறார். சமீபத்தில் இந்த படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியான நிலையில் 2025 ஜூன் மாதம் படப்பிடிப்பு தொடங்க இருக்கின்றன. இந்நிலையில் இந்த படத்தில் பிரபல நடிகை ரவீனா டாண்டன் இணைந்திருப்பதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. விரைவில் மற்ற நடிகர்கள் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் நடிகை ரவீனா டாண்டன், கமல்ஹாசன் நடிப்பில் வெளியான ஆளவந்தான் படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.