பிரபல சீரியல் நடிகர் யுவன்ராஜ் நேத்ரன் காலமானார்.
யுவன்ராஜ் நேத்ரன் சன் டிவியில் ஒளிபரப்பான மருதாணி என்ற சீரியல் மூலம்தான் தனது நடிப்பு பயணத்தை தொடங்கினார் யுவன்ராஜ் நேத்ரன். அதைத்தொடர்ந்து இவர் வள்ளி, முள்ளும் மலரும், உறவுகள் சங்கமம், மகாலட்சுமி, சிவமயம் பாவம் கணேசன், சதிலீலாவதி, சூப்பர் குடும்பம் உள்ளிட்ட பல சீரியல்களில் நடித்து பிரபலமானவர். இவர் சின்னத்திரையில் கிட்டதட்ட 25 வருடங்கள் பணியாற்றியுள்ளார். இந்நிலையில் தான் இவர் கடந்த ஆறு மாதத்திற்கு முன்பாக நுரையீரல் புற்றுநோயினால் பாதிக்கப்பட்டு தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்துள்ளார். 47 வயதுடைய யுவன்ராஜ் நேத்ரன் சென்னை வளசரவாக்கம் பகுதியில் வசித்து வந்த நிலையில் நீண்ட நாட்களாக புற்றுநோய்க்கான சிகிச்சை பெற்று வந்துள்ளார்.
இருப்பினும் இவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இவருடைய மறைவு சின்னத்திரை உலகில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. சின்னத்திரையை சார்ந்த பிரபலங்கள் பலரும் சமூக வலைதளங்களில் தங்களின் இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

நேத்ரன், நடிகை தீபாவை திருமணம் செய்து கொண்டிருந்த நிலையில் இவர்கள் இருவருக்கும் அபிநயா மற்றும் அஞ்சனா என இரு மகள்கள் இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.


