spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமா40 வருடங்களுக்கு பிறகு எடுக்கப்படும் ரிஸ்க்கான சண்டைக்காட்சி.... 'சர்தார் 2'-வில் சம்பவம் செய்யும் கார்த்தி!

40 வருடங்களுக்கு பிறகு எடுக்கப்படும் ரிஸ்க்கான சண்டைக்காட்சி…. ‘சர்தார் 2’-வில் சம்பவம் செய்யும் கார்த்தி!

-

- Advertisement -

சர்தார் 2 படம் தொடர்பான லேட்டஸ்ட் அப்டேட் வெளியாகியுள்ளது.40 வருடங்களுக்கு பிறகு எடுக்கப்படும் ரிஸ்க்கான சண்டைக்காட்சி.... 'சர்தார் 2'-வில் சம்பவம் செய்யும் கார்த்தி!

பிஎஸ் மித்ரன் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் வெளியான சர்தார் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. ஸ்பை திரில்லர் கதைக்களத்தில் வெளியான இந்த படத்தில் நடிகர் கார்த்தி இரட்டை வேடங்களில் மிரட்டி இருந்தார். தற்போது பிஎஸ் மித்ரன், கார்த்தி கூட்டணியில் இந்த படத்தின் இரண்டாவது பாகம் உருவாகி வருகிறது. அதன்படி சர்தார் 2 என்று தலைப்பு வைக்கப்பட்டிருக்கும் இந்த படத்தை பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. யுவன் சங்கர் ராஜா இதற்கு இசையமைக்கிறார்.40 வருடங்களுக்கு பிறகு எடுக்கப்படும் ரிஸ்க்கான சண்டைக்காட்சி.... 'சர்தார் 2'-வில் சம்பவம் செய்யும் கார்த்தி! இந்த படத்தில் கார்த்தியுடன் இணைந்து மாளவிகா மோகனன், ஆஷிகா ரங்கநாத், ரஜிஷா விஜயன் மற்றும் பலர் நடிக்கின்றனர். எஸ்.ஜே. சூர்யா இப்படத்தில் வில்லனாக நடிக்கிறார். ஏற்கனவே இந்த படத்தின் படப்பிடிப்புகள் தொடங்கப்பட்டு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கடந்த வாரம் இந்த படத்தின் கிளைமாக்ஸ் காட்சி படமாக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. அதில் கார்த்தி மற்றும் எஸ்.ஜே. சூர்யா ஆகிய இருவருக்குமான சண்டைக் காட்சிகள் பிரம்மாண்டமான அளவில் பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் நடத்தப்பட்டதாக தகவல் கசிந்துள்ளது. அதாவது ஆவேசம் படத்தின் ஸ்டண்ட் மாஸ்டர் சேத்தன் ராம்ஷி டிசோசா இந்த படத்தில் சண்டை பயிற்சியாளராக பணியாற்றுகிறார். கார்த்தி, எஸ் ஜே சூர்யா ஆகிய இருவரும் எந்தவித டூப்பும் இல்லாமல் கேபிள் காரில் சண்டையிடுவது போன்ற காட்சி படமாக்கப்பட்டதாம்.40 வருடங்களுக்கு பிறகு எடுக்கப்படும் ரிஸ்க்கான சண்டைக்காட்சி.... 'சர்தார் 2'-வில் சம்பவம் செய்யும் கார்த்தி! இது போன்ற சண்டை காட்சி கடந்த 1984 இல் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான எனக்குள் ஒருவன் படத்தின் கிளைமாக்ஸில் இடம்பெற்று இருந்தது குறிப்பிடத்தக்கது. இதில் கமல் மற்றும் சத்யராஜ் ஆகிய இருவரும் டூப் இல்லாமல் நடித்திருந்தன. இது போன்ற அதற்கான சண்டை காட்சி இடம்பெற்ற கடைசி படம் இதுதான். இந்நிலையில் 40 வருடங்களுக்கு பிறகு அதே போன்ற ஒரு சண்டைக் காட்சியை சர்தார் 2 படத்தில் படமாக்கி உள்ளனர். இந்த தகவல் படத்தின் மீதான எதிர்பார்ப்பை மிகப்பெரிய அளவில் அதிகமாக்கியுள்ளது. விரைவில் அடுத்தடுத்த அப்டேட்டுகள் வெளியாகும் என நம்பப்படுகிறது.

MUST READ