spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாஇளைஞர்களுக்கு பெற்றோரின் சிறப்பை உணர்த்தும்… ஓரு கோவில்! 

இளைஞர்களுக்கு பெற்றோரின் சிறப்பை உணர்த்தும்… ஓரு கோவில்! 

-

- Advertisement -

இளைஞர்கள் பெற்றோர்களை மதித்து வணங்குதல் வேண்டி விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், மதுரை முத்து தனது மனைவியின் சிலையுடன் பெற்றோர்களின் சிலையை திறந்து வைத்து வழிபாடு.இளைஞர்களுக்கு பெற்றோரின் சிறப்பை உணர்த்தும்… ஓரு கோவில்! 

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே அரசப் பட்டி கிராமத்தைச் சார்ந்த சின்னத்திரை நடிகரும், திரைப்படத்தில் காமெடி நடிகராக வருபவருமான மதுரை முத்து தனது பெற்றோர்களுடைய (ராமசாமி – முத்து இருளாயி) சிலையுடன்,  சமீபத்தில் விபத்தில் காலமான தனது மனைவி (லேகா) வின் சிலையையும் ஒன்றாக வைத்து அதற்கு கோவிலாக வடிவமைத்து அதற்கான திறப்பு விழாவை இன்று நடத்தினார் .

we-r-hiring

தற்போது இளைஞர்கள் பெற்றோர்களை அவமதிப்பது, அவர்களுடைய பேச்சைக் கேளாமை,  மது போதைகளுக்கு அடிமைப்பட்டு பெற்றோர்களை அவதூறு பேசுதல் உள்ளிட்டவற்றையெல்லாம் தவிர்க்கும் வகையிலும், இளைஞர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக , பெற்றோர்களை மதித்து வணங்குதல் எவ்வளவு சிறப்பு வாய்ந்தது என்பதை உணர்த்தும் வகையில், அவர்களுக்கு வயதான காலத்தில் உதவிக்கரம் நீட்டும் எண்ணத்தில் இளைஞர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக , மதுரை முத்து தனது பெற்றோருடன் தனது மனைவி சிலையையும், ஒன்றிணைத்து கோவிலாக வடிவமைத்து, இன்று அதற்கான திறப்பு விழாவையும் நடத்தி, நாள்தோறும் அவர்கள் மூவருடைய சிலைகளுக்கும் மலர் தூவி மரியாதை செய்து வழிபாடு  செய்து வருவதாக உறுதி அளித்தார்.

இதனைத் தொடர்ந்து கிராம பள்ளி மாணவ, மாணவியர்களுக்கும், கிராம மக்களுக்கும் நலத்திட்ட உதவிகளையும், அன்னதானத்தையும் மதுரை முத்து வழங்கி மகிழ்ந்தார்.

இவ்விழாவில், திருமங்கலம் , மதுரை, கல்லுப்பட்டி , பேரையூர், உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதியில் இருந்தும்,சின்னத்திரை துணை நடிகர் , நடிகைகள் மற்றும் சினிமா தொழில்நுட்ப வல்லுநர்கள் உட்பட பல்வேறு சமூக ஆர்வலர்களும், அரசியல்வாதிகளும், பொதுமக்களும் திரளாக கலந்து கொண்டனர்.

யோகிபாபு, விமல், நடிக்கும் புதிய படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!

MUST READ