ஐஸ்வர்யா ராய், அபிஷேக் பச்சன் உள்ளிட்டோரை தொடர்ந்து தெலுங்கு நடிகர் நாகார்ஜுனா தனியுரிமை பாதுகாக்க கோரி டெல்லி உயர் நீதிமன்றத்தை தொடர்ந்த வழக்கில் உரிய உத்தரவுகளை பிறப்பதாக நீதிபதி உறுதியளித்துள்ளாா்.போலியான இணையதளங்கள், சமூக வலைத்தளங்கள் உள்ளிட்டவற்றில் உரிய அனுமதி இல்லாமல் புகைப்படம் வீடியோ பெயர் உள்ளிட்டவற்றை பயன்படுத்துவதாக நடிகை ஐஸ்வர்யா ராய், அவரது கணவர் அபிஷேக் பச்சன் மற்றும் அனில் கபூர் உள்ளிட்டோர் டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர். இந்த வழக்கில் அனுமதியின்றி பயன்படுத்தப்படும் புகைப்படம், பெயர், வீடியோ உள்ளிட்டவற்றை நீக்குமாறு டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில் தெலுங்கு நடிகர் நாகார்ஜுனா தனியுரிமை பாதுகாக்க கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில், நாகார்ஜுனாவின் புகைப்படம் உள்ளிட்டவை ஏ.ஐ வீடியோக்கள் தயாரிப்பது, ஆபாச வீடியோக்களில் பயன்படுத்துவது, டி-ஷர்ட் மற்றும் பொருள்கள் உள்ளிட்டவற்றை தயாரித்து அதனை விற்பனை செய்வது உள்ளிட்ட செயல்பாடுகளில் சிலர் ஈடுபட்டு வருகின்றனர். இது தனது தனியுரிமையை பாதிப்பதாக நீதிமன்றத்தில் நாகர்ஜுனா தரப்பு வாதிட்டது. வாதங்களைக் கேட்டுக் கொண்ட நீதிபதி இவ்வழக்கில் உரிய உத்தரவுகளை விரைவில் பிறப்பிப்பதாக தெரிவித்துள்ளார்.
வாயை திறக்கவே பயப்படறீங்க! தமிழ்நாட்டை பாதுகாப்பது ஸ்டாலின்தான்! தராசு ஷ்யாம் நேர்காணல்!
