நடிகர் சூரி சமீபத்தில் பேட்டி கொடுத்துள்ளார்.

நடிகர் சூரி தமிழ் சினிமாவின் சுசீந்திரன் இயக்கத்தில் வெளியான வெண்ணிலா கபடி குழு படத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். அதைத்தொடர்ந்து விஜய், சூர்யா, சிவகார்த்திகேயன், விஷ்ணு விஷால் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து பணியாற்றி பெயரையும் புகழையும் பெற்றார். அதேசமயம் இவர், வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான விடுதலை படத்தில் ஹீரோவாகவும் அறிமுகமானார். இவர் ஹீரோவாக நடித்த முதல் படமே மிகப்பெரிய வெற்றி படமாக அமைந்தது. எனவே அதன் பின்னர் தொடர்ந்து பல படங்களில் ஹீரோவாக நடித்து வருகிறார். அந்த வகையில் நடிகர் சூரி அடுத்தடுத்த படங்களில் வித்தியாசமான கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். மேலும் இவர் தற்போது மாமன், மண்டாடி ஆகிய படங்களை கைவசம் வைத்திருக்கிறார். இந்நிலையில் சமீபத்தில் நடந்த பேட்டியில் பேசிய சூரி, “வெற்றி அண்ணன் என்னிடம் வந்து இனிமே இதுலேயே இருந்திடாதீங்க. வருடத்திற்கு ஒரு காமெடி படம் பண்ணுங்க என்று சொன்னார். ஆனால் விடுதலை படத்தின் ரிலீஸுக்கு பிறகு, நீ காமெடி ரோலில் நடிப்பதற்கு வாய்ப்பே இல்லன்னு சொல்லிட்டார். அதே மாதிரி ஒரு ஆள் கூட என்னை காமெடி ரோலில் நடிக்க கூப்பிடவே இல்ல” என்று தெரிவித்துள்ளார்.