spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாதங்கையின் திருமண நிகழ்ச்சியில் படுகா டான்ஸ் ஆடிய சாய்பல்லவி... வீடியோ வைரல்...

தங்கையின் திருமண நிகழ்ச்சியில் படுகா டான்ஸ் ஆடிய சாய்பல்லவி… வீடியோ வைரல்…

-

- Advertisement -
தமிழ் சினிமா மட்டுமல்ல, மலையாளம், தெலுங்கு, கன்னடம் என அனைத்து தென்னிந்திய மொழிகளிலும் சாய் பல்லவிக்கு ரசிகர்கள் ஏராளம். நடிகையாக மட்டுமன்றி அவரது சிம்ப்லிசிட்டியை பிடித்தவர்கள் ஏராளம். மலையாளத்தில் வெளியான பிரேமம் படத்தில் மலர் டீச்சர் வேடத்தில் நடிகை சாய் பல்லவி நடித்திருப்பார். இப்படத்தின் மூலமாகவே அவர் திரையுலகில் நாயகியாக அறிமுகமாகினார். முதல் படத்திலேயே தமிழ் ரசிகர்களையும் கவர்ந்த சாய் பல்லவி அடுத்து தமிழில் மாரி 2 படத்தில் நடித்தார். அடுத்து தியா, என்ஜிகே, பாவ கதைகள், கார்கி, படத்தில் நடித்திருந்தார்.

கோலிவுட் மட்டுமில்லாமல் தெலுங்கிலும் ஆதிக்கம் செலுத்தும் முன்னணி நடிகைகளில் ஒருவர் சாய் பல்லவி. தெலுங்கில் அவர் நடித்த பல படங்கள் மாபெரும் ஹிட் அடித்துள்ளன. தற்போது சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக புதிய படத்தில் நடித்துவருகிறார். அவரது தங்கை பூஜா கண்ணனும் ஏ.எல்.விஜய் இயக்கிய சித்திரை செவ்வானம் என்ற படத்தில் நடித்து நடிகையாக அறிமுகமாகினார். தொடர்ந்து படங்களில் நடிக்காமல் படிப்பில் கவனம் செலுத்தி வந்தார்

இந்நிலையில், நடிகை பூஜா கண்ணன் காதலிப்பதாக அண்மையில் அறிவித்திருந்தார். அவர் தற்போது திருமணம் செய்து கொள்ள இருக்கிறார். இதையொட்டி நடைபெற்ற நிச்சயதார்த்த நிகழ்ச்சியில், நடிகை சாய் பல்லவி அவரது பாரம்பரிய நடனமான படுகா ஆடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

MUST READ