நடிகை தன்யா ரவிச்சந்திரன் தனது பிறந்தநாளை ரசிகர்களுடன் கொண்டாடிய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
நடிகை தன்யா ரவிச்சந்திரன் பழம்பெரும் நடிகர் ரவிச்சந்திரனின் பேத்தி ஆவார். அவர் தமிழில் ‘பலே வெல்லயத்தேவா’, ‘பிருந்தாவனம் ‘, ‘கருப்பன்’, ‘மாயோன்’ உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். விஜய் சேதுபதியுடன் நடித்த கருப்பன் திரைப்படம் அவருக்கு நல்ல வரவேற்பைப் பெற்றுத் தந்தது.
அதையடுத்து சில காலம் அவர் தமிழ் படங்களில் தலைகாட்டவில்லை. தெலுங்கில் சில படங்களில் நடித்து வந்தார். சமீபத்தில் உதயநிதி நடிப்பில் வெளியான நெஞ்சுக்கு நீதி படத்தில் தன்யா நடித்திருந்தார். அதையடுத்து அகிலன் படத்தில் ஜெயம் ரவியின் மனைவியாக நடித்தார்.
இந்நிலையில் தன்யா தனது பிறந்தநாளை தன்யா ரசிகர்களுடன் கேக் வெட்டிக் கொண்டாடியுள்ளார். மேலும் அவர்களுக்கு பிரியாணி விருந்தும் அளித்துள்ளார். அவரின் இந்த செயல் பாராட்டுகளைப் பெற்று வருகிறது.