spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாரசிகர்களை ஏமாற்றிய ஆதிபுருஷ்..... அதிர்ச்சியில் படக்குழுவினர்!

ரசிகர்களை ஏமாற்றிய ஆதிபுருஷ்….. அதிர்ச்சியில் படக்குழுவினர்!

-

- Advertisement -

பிரபாஸ் நடிப்பில் ‘ஆதிபுருஷ்‘ என்னும் வரலாற்று சரித்திர திரைப்படம் உருவாகி இன்று 2D மற்றும் 3D வடிவங்களில் வெளியாகி உள்ளது. டி சிரிஸ் நிறுவனம் மற்றும் ரெட்ரோபைல்ஸ் நிறுவனம் இணைந்து தயாரித்த இந்த படத்தை இயக்குனர் ஓம்ராவத் இயக்கியுள்ளார்.

இப்படம் அறிவிக்கப்பட்ட பொழுது தெலுங்கு திரை உலகில் மட்டும் இன்றி பாலிவுட்டிலும் நல்ல எதிர்பார்ப்பு இருந்து வந்தது. ஆனால் இப்படத்தின் டீசர் வெளியான போது படத்தின் மீதான எதிர்பார்ப்புகள் குறைந்துவிட்டது.

we-r-hiring

படத்தின் டீசரில் இடம் பெற்ற பெரும்பாலான காட்சிகளை இணையவாசிகள் டிரால் செய்து வந்தனர். இந்நிலையில் படக்குழு மேலும் ஒரு பொருட்செலவை ஒதுக்கி படத்திற்கான வேலைகளை மேம்படுத்தும் பொருட்டு செயல்பட்டு வந்தன.

இதைத்தொடர்ந்து வெளிவந்த ஆதிபுருஷ் திரைப்படத்தின் டிரைலர் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பை நிலை நிறுத்தியது. டீசரை ஒப்பிடும் போது ட்ரெய்லர் ரசிகர்களுக்கு சற்று ஆறுதலாகவே அமைந்தது.
அதன்பின் படத்தின் ப்ரோமோஷன் பணிகள் மிக தீவிரமாக நடைபெற்று வந்தது.

இந்நிலையில் பான் இந்தியா திரைப்படமாக உருவாகியுள்ள இந்த படம் இன்று திரையரங்குகளில் வெளியாகி உள்ளது.

இப்படத்தில் ராமனாக நடித்த பிரபாஸ் மற்றும் ராவணனாக நடித்த சைப் அலிகானின் தோற்றம் சிறிதளவு கூட ஒத்துப் போகவில்லை என்று கூறப்படுகிறது. மேலும் இப்படத்தில் இதிகாசங்களில் காட்டப்படும் அனுமன் மற்றும் வானரங்களுக்கு பதிலாக ஹாலிவுட் படங்களில் காணப்படும் கொரில்லாக்களைப் போல சித்தரித்த வி எப் எக்ஸ் காட்சிகள் இடம் பெற்றுள்ளன என்று பலர் தன் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இப்படமானது 1000 கோடியை வசூல் செய்யும் என்று எதிர்பார்ப்புகள் நிலவி வந்த நிலையில் இப்படத்திற்கு நெகட்டிவ் விமர்சனங்கள் குவிந்த வண்ணம் உள்ளது. இது படக்குழுவினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

MUST READ