Homeசெய்திகள்சினிமாபிரபாஸ் நடித்து வரும் 'ஆதிபுருஷ்'... அமெரிக்கால தான் முதல்ல ரிலீஸாம்!

பிரபாஸ் நடித்து வரும் ‘ஆதிபுருஷ்’… அமெரிக்கால தான் முதல்ல ரிலீஸாம்!

-

- Advertisement -

ஆதிபுருஷ் திரைப்படம் அமெரிக்காவில் நடைபெறும் திரைப்பட விருது விழாவில் முதன்முறையாக ஒளிபரப்பாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பிரபாஸ் நடிப்பில் ஆதிபுருஷ் என்ற வரலாற்று சரித்திர படம் உருவாகி வருகிறது. படத்தில் பாலிவுட் நடிகை க்ரித்தி சானோன் சீதையாக நடித்துள்ளார். சைப் அலி கான் வில்லனாக நடித்துள்ளார்.

we-r-hiring

 

ஆதிபுருஷ் படத்தின் டீசர் சில மாதங்களுக்கு முன்பு வெளியானது. ஆனால் டீசர்  அனைவரது எதிர்பார்ப்பையும் ஏமாற்றியது. டீசர் சிறுவர்கள் பார்க்கும் பொம்மைப் படம் போல இருந்ததால் பலரும் படத்தை கேலி செய்யத் துவங்கினார்.

இந்த வருடம் ஜனவரி 12 ஆம் தேதி படம் வெளியாகி இருக்க வேண்டியது. ஆனால் டீசருக்கு கிடைத்த மோசமான வரவேற்பால் படக்குழுவினர் இன்னும் நன்றாக படத்தை செதுக்கிவிட்டு வருகிறோம் என்று கூடுதலாக அவகாசம் கேட்டுள்ளனர்.

இந்நிலையில் ஆதிபுருஷ் திரைப்படம் அமெரிக்காவில் நடைபெறும் டிரிபெகா திரைப்பட விருது விழாவில் ஜூன் 13-ம் தேதி முதன்முறையாக ஒளிபரப்பாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த முறையாவது படத்தின் தரம் மேலே போயிருக்கிறதா என்பதைப் பார்ப்போம்!

 

MUST READ