கார் ரேஸிங் பயிற்சியில் ஈடுபட்ட போது நடிகர் அஜித்துக்கு விபத்து ஏற்பட்டுள்ளது.
நடிகர் அஜித் தமிழ் சினிமாவில் மிகப்பெரிய ஸ்டார் நடிகராக வலம் வரும் நிலையில் இவர் நடிப்பதில் மட்டுமல்லாமல் பைக், கார் ஓட்டுவதிலும் திறமை உடையவர். அதன்படி கார் ரேஸிங்கிலும் கலந்து கொள்வார். இந்நிலையில் 15 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் கார் ரேஸிங்கில் கலந்து கொள்வதற்காக துபாய் சென்றுள்ளார் அஜித். அஜித் குமார் கார் ரேஸிங் என்ற பெயரில் அணி ஒன்றை தொடங்கி அந்த அணியின் முதன்மை ஓட்டுநராக செயல்படுகிறார். எனவே தற்போது துபாய் சென்றுள்ள அஜித், பயிற்சியில் ஈடுபட்டபோது விபத்து ஏற்பட்டது. இது தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி அஜித் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இருப்பினும் அதிர்ஷ்டவசமாக நடிகர் அஜித்துக்கு எந்தவித காயமும் ஏற்படவில்லை.
Ajith Kumar’s massive crash in practise, but he walks away unscathed.
Another day in the office … that’s racing!#ajithkumarracing #ajithkumar pic.twitter.com/dH5rQb18z0— Ajithkumar Racing (@Akracingoffl) January 7, 2025
கார் ரேஸிங்கில் இது போன்ற விபத்துகள் ஏற்படுவது சாதாரண விஷயமாக இருந்தாலும் அஜித் இன்னும் கவனமாக இருக்க வேண்டும் என ரசிகர்கள் பலரும் கேட்டுக் கொண்டுள்ளனர்.
அஜித் நடிப்பில் விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி ஆகிய இரண்டு படங்களும் உருவாகி இருக்கும் நிலையில் இந்த இரண்டு படங்களும் அடுத்தடுத்து திரைக்கு வர தயாராகி வருகின்றன.