அஜித்தின் குட் பேட் அக்லி படக்குழு பொங்கல் ரேஸிலிருந்து விலகியதை உறுதி செய்துள்ளது.
நடிகர் அஜித் துணிவு திரைப்படத்திற்கு பிறகு விடாமுயற்சி திரைப்படத்தில் நடித்து வந்தார். இந்த படத்தின் படப்பிடிப்புகள் ஏறத்தாழ நிறைவடைந்த நிலையில் ஓரிரு நாட்கள் மட்டும் படப்பிடிப்பு மீதம் இருக்கிறது. அதே சமயத்தில் நடிகர் அஜித், ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் குட் பேட் அக்லி எனும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். அஜித்தின் 63வது படமாக உருவாகும் இந்த படத்தினை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்க தேவி ஸ்ரீ பிரசாத் இதற்கு இசையமைக்கிறார். இந்த படத்தில் அஜித்துடன் இணைந்து திரிஷா, பிரசன்னா, சுனில், ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்ட பலரும் நடித்து வருவதாக சொல்லப்படுகிறது. அதன்படி இந்த படத்தின் படப்பிடிப்புகளும் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தொடங்கப்பட்டு ஐதராபாத், ஸ்பெயின் போன்ற பகுதிகளில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. மேலும் இதன் அடுத்த கட்ட படப்பிடிப்பு பல்கேரியாவில் நடைபெற இருப்பதாகவும் தகவல் வெளியாகி வருகின்றன. இது ஒரு பக்கம் இருந்தாலும் அஜித் படம் திரையரங்குகளில் வெளியாகி ஓராண்டுக்கு மேல் ஆகிவிட்ட நிலையில் ரசிகர்கள் பலரும் அஜித்தின் அடுத்த படத்திற்காக மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்துக் கொண்டிருக்கின்றனர். ஆனால் அஜித்தின் விடாமுயற்சி திரைப்படம் இன்னும் நிறைவடையாத பட்சத்தில் குட் பேட் அக்லி படமாவது திரைக்கு வந்துவிடும் என்று ரசிகர்கள் உற்சாகத்தில் இருந்து வருகின்றனர். அதன்படி இந்த படத்தின் அறிவிப்பு வெளியான போதே இப்படம் 2025 பொங்கல் தினத்தை முன்னிட்டு வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. அடுத்தடுத்து வெளியான ஒவ்வொரு போஸ்டர்களிலும் படக்குழு பொங்கல் வெளியீட்டை உறுதி செய்து வந்தது. ஆனால் சமீபத்திய தகவலின் படி அடுத்த ஆண்டு ஜனவரி 10 பொங்கல் தினத்தை முன்னிட்டு ராம் சரணின் கேம் சேஞ்சர் வெளியாக இருப்பதால் அஜித்தின் குட் பேட் அக்லி திரைப்படம் அடுத்த ஆண்டு கோடை விடுமுறையில் தான் வெளியாகும் என்று சொல்லப்படுகிறது.
Exciting news! #RomeoPictures proudly acquires the Tamil Nadu, Kerala, and Karnataka theatrical rights of #GoodBadUgly
#AjithKumar @MythriOfficial @Adhikravi @trishtrashers @Prasanna_actor @iam_arjundas @mynameisraahul @ThisIsDSP @suneeltollywood… pic.twitter.com/Ku6b9sX4vp— Mythri Movie Makers (@MythriOfficial) October 25, 2024
இந்நிலையில் குட் பேட் அக்லி படக்குழுவும் பொங்கல் ரேஸிலிருந்து விலகியதை உறுதி செய்துள்ளது. அதாவது படத்தின் தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம், தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் குட் பேட் அக்லி திரைப்படத்தினை வெளியிடும் உரிமையை ரோமியோ பிக்சர்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளதாக புதிய போஸ்டர் ஒன்றின் மூலம் அறிவித்துள்ளது. ஆனால் அந்த போஸ்டரில் 2025 பொங்கல் வெளியீடு என்பது குறிப்பிடப்படவில்லை. எனவே இதன் மூலம் படக்குழுவே பொங்கல் ரேஸில் இருந்து விலகியதை உறுதி செய்துள்ளதாக பலரும் தங்களின் கருத்துக்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.