சென்னை மாம்பலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பெண் ஒருவர் நடிகர் காதல் சுகுமாரன் மீது அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் மூன்று பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.காதல் சுகுமாரன் ஏற்கனவே திருமணம் ஆன நிலையில், மனைவியிடம் இருந்து விவாகரத்து பெற்று தனித்து வாழ்வதாக கூறியுள்ளாா். அப் பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக பழகி ஏமாற்றி தன்னிடமிருந்து 8 லட்சம் ரூபாய் பணத்தை பெற்றுக் கொண்டு திரும்ப தர மறுக்கிறாா். தன்னுடைய பணத்தை திரும்ப பெற்று தர வேண்டும் என்றும். பொய்சொல்லி தன்னை ஏமாற்றிய காரணத்திற்காக தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் அளித்துள்ளாா். இந்நிலையில் சுகுமாரன் மீது மாம்பழம் அனைத்து காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.
காதல் சுகுமாரன் மீது மூன்று பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பாலியல் ரீதியாக ஏமாற்றியது, திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றியது,பணம் பெற்றுக் கொண்டு மோசடி செய்த விவகாரம் உள்ளிட்ட மூன்று சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.