spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாஜவான் ஜாம்பவான்களை பாராட்டிய அல்லு அர்ஜுன்!

ஜவான் ஜாம்பவான்களை பாராட்டிய அல்லு அர்ஜுன்!

-

- Advertisement -

அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடித்து வெளியான திரைப்படம் ஜவான். இதில் ஷாருக்கான் உடன் இணைந்து விஜய் சேதுபதி, நயன்தாரா, தீபிகா படுகோன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ரெட் சில்லிஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் இந்த படத்தை தயாரித்துள்ளது. அனிருத் இதற்கு இசையமைத்துள்ளார். இந்தப் படம் கடந்த செப்டம்பர் 7ஆம் தேதி வெளியாகி உலக அளவில் வசூல் வேட்டை நடத்தி வருகிறது. அந்த வகையில் 574 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளது. ஜவான் திரைப்படத்தில் திரையுலக பிரபலங்கள் பலரும் பாராட்டி வருகின்றனர்.

அந்த வகையில் தற்போது அல்லு அர்ஜுன் தனது சமூக வலைதள பக்கத்தில், ” ஜவான் திரைப்படம் மிகப்பெரிய பிளாக்பஸ்டர் வெற்றி பெற்றதற்காக நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள், தயாரிப்பாளர்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள். ஷாருக்கான் இதுவரை இல்லாத புதிய அவதாரத்தில் காணப்படுகிறார். தனது நடிப்பினால் ஒட்டுமொத்த இந்தியாவையே வசிகரித்துள்ளார். உண்மையில் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. நாங்கள் உங்களுக்காக வேண்டிக் கொண்டோம். விஜய் சேதுபதி வழக்கம் போல் அவரின் கதாபாத்திரத்தில் பயங்கரமாக நடித்துள்ளார். நயன்தாரா மற்றும் தீபிகா படுகோன் இருவரும் மிகவும் நேர்த்தியான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளனர். அனிருத், இந்த தேசத்தில் இருக்கும் அனைவரையும் இசையால் மயக்குகிறார்.
இயக்குனர் அட்லீக்கு மிகப்பெரிய வாழ்த்துக்கள். எங்கள் அனைவரையும் பெருமைப்பட வைத்துள்ளீர்கள். சிந்தனையை தூண்டும் ஒரு கமர்சியல் படத்தை கொடுத்துள்ளீர்கள். இந்தியன் பாக்ஸ் ஆபிஸில் அது வரலாற்றைப் படைத்து கொண்டிருக்கிறது.

MUST READ