அமரன் திரைப்படம் ஓராண்டை நிறைவு செய்துள்ளது.
கடந்த ஆண்டு அக்டோபர் 31ஆம் தேதி தீபாவளி தினத்தை முன்னிட்டு ‘அமரன்’ திரைப்படம் வெளியானது. மறைந்த ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்த படத்தில், முகுந்த்- ஆக சிவகார்த்திகேயனும், இந்து ரெபேக்கா வர்கீஸாக சாய் பல்லவியும் நடித்திருந்தனர். இந்த படத்தை ராஜ்குமார் பெரியசாமி இயக்க கமல்ஹாசன் இப்படத்தை தயாரித்திருந்தார். ஜி.வி. பிரகாஷ் இதற்கு இசையமைத்திருந்தார். இந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இந்திய அளவில் பல்வேறு தரப்பினரிடையை பாராட்டுகளை பெற்றது.
அந்த வகையில் ரூ.300 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து சாதனை படைத்தது. இதில் சிவகார்த்திகேயன் முழுக்க முழுக்க ராணுவ வீரராக, தனக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரமாகவே வாழ்ந்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தியிருந்தார். நடிகை சாய் பல்லவியின் நடிப்பை பற்றி சொல்லவே வேண்டாம். அவருடைய நடிப்பு அனைவரையும் உருக வைத்தது. மேலும் ஜி.வி. பிரகாஷின் இசை இந்த படத்தின் ஒவ்வொரு காட்சிகளுக்கும் உயிர் கொடுத்தது. இவ்வாறு இன்றுவரையிலும் பெரிய அளவில் பேசப்படும் ‘அமரன்’ திரைப்படம் இன்றுடன் (அக்டோபர் 31) ஓராண்டினை நிறைவு செய்துள்ளது. இதனை கொண்டாடும் விதமாக இப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் ஸ்பெஷல் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது.
From a story of Courage to a symbol of Honour.#OneYearofAmaran, one Lifetime of Pride.#Amaran#MajorMukundVaradarajan#AmaranMajorSuccess #KamalHaasan #Sivakarthikeyan #SaiPallavi #RajkumarPeriasamy
A Film By @Rajkumar_KP @ikamalhaasan @Siva_Kartikeyan #Mahendran… pic.twitter.com/yGoS0drfA5
— Raaj Kamal Films International (@RKFI) October 31, 2025

அந்த வீடியோவில் மு.க. ஸ்டாலின், ரஜினி உள்ளிட்ட பல முக்கிய பிரபலங்கள் இந்த படத்தை பாராட்டியது தொடர்பான காட்சிகள் இணைக்கப்பட்டுள்ளது. இந்த வீடியோவை ரசிகர்கள் அதிகம் பகிர்ந்து இணையத்தில் வைரலாக்கி வருகின்றனர்.


