spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாமகன் திருமணத்திற்கு ரூ.1000 கோடி செலவு செய்யும் அம்பானி... திரை நட்சத்திரங்களுக்கு சிறப்பு ஏற்பாடு...

மகன் திருமணத்திற்கு ரூ.1000 கோடி செலவு செய்யும் அம்பானி… திரை நட்சத்திரங்களுக்கு சிறப்பு ஏற்பாடு…

-

- Advertisement -
இந்தியாவின் மாபெரும் தொழில் அதிபரும், பணக்காரருமான அம்பானி, தனது மகனின் திருமணத்திற்காக மட்டும் ஆயிரம் கோடி ரூபாய் செலவு செய்ய உள்ளாராம்.

இந்தியாவின் முதல் பணக்காரரும், ஆசியாவின் பணக்காரப் பட்டியலில் இடம்பெற்றவருமான முகேஷ் அம்பானி, மாபெரும் தொழில் அதிபரும் கூட. ஃபோர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்ட தகவலின்படி, இவருடைய சொத்து மதிப்பு சுமார் 10 லட்சம் கோடி ஆகும். இவருக்கு இரண்டு மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். இதில், கடைசி மகன் ஆனந்த் அம்பானிக்கும், தொழில் அதிபர் வீரேன் மெர்ச்சண்டின் மகள் ராதிகா மெர்ச்சண்ambani ட்டுக்கும் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் திருமண நிச்சயம் நடைபெற்று முடிந்தது. நிச்சய நிகழ்ச்சியே வெகு விமரிசையாக கோலாகலமாக நடைபெற்றது

we-r-hiring
இருவரின் திருமணமும் வரும் ஜூலை மாதம் நடைபெற உள்ளது. குஜராத் மாநிலம் ஜாம் நகரில் இந்த திருமணம் நடைபெற உள்ளது. திருமணத்திற்கு இன்னும் 3 மாதங்களே உள்ள நிலையில், ஜாம் நகரில் திருமண ஏற்பாடுகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. மேலும், ஆனந்த் அம்பானியின் திருமணத்தை முன்னிட்டு, ஜாம் நகரில் சுமார் 50 ஆயிரம் பேருக்கு இரண்டாயிரத்து 500 வகை உணவுகளுடன் விருந்து போடப்பட்டது.

இந்நிலையில், ஆனந்த் அம்பானியின் திருமணத்திற்கு சுமார் ஆயிரம் கோடி ரூபாய் செலவு செய்ய உள்ளாராம் அவரது தந்தை முகேஷ் அம்பானி. திருமண விழாவில் பங்கேற்க தென்னிந்தியா முதல் வட இந்தியா வரை அனைத்து தரப்பு திரை நட்சத்திரங்களும் அழைக்கப்பட்டு உள்ளனர். தென்னிந்தியாவிலிருந்து நடிகர் ரஜினிகாந்த் அழைக்கப்பட்டிருக்கிறார். அந்த வகையில் திரை நட்சத்திரங்களையும், தொழில் அதிபர்களையும் வரவேற்கவும், அவர்களை உபசரிக்கவும் கோடிக்கணக்கில் பணத்தை கொட்டியுள்ளாராம் அம்பானி. இது தவிர, ஆனந்த் அம்பானி திருமணத்தில் பாட பிரபல ஆங்கில பாடகர் ரிஹானாவுக்கு 41 கோடி ரூபாய் ஊதியம் கொடுத்துள்ளார் முகேஷ் அம்பானி.

MUST READ