- Advertisement -
அனிமல் திரைப்படத்தால் நல்ல விஷயங்கள் நடந்துள்ளது என படத்தில் நடித்திருந்த ரன்பீர் கபூர் தெரிவித்துள்ளார்.

தான் இயக்கிய முதல் படத்திலேயே ஒட்டுமொத்த இந்திய திரையுலகையும் திரும்பிப் பார்க்க வைத்த இயக்குநர் சந்தீப் ரெட்டி. அர்ஜூன் ரெட்டி என்ற திரைப்படத்தை இயக்கி இருந்தார். இதில், விஜய் தேவரகொண்டா நாயகனாக நடித்திருந்தார். இத்திரைப்படம் தெலுங்கில் மாபெரும் ஹிட் அடித்தது. இப்படத்தை தமிழில் ரீமேக் செய்து துருவ் விக்ரம் நடித்திருந்தார். அடுத்து இந்தியில் ரீமேக் செய்தனர். படத்தை சந்தீப் ரெட்டியே இயக்கினார். இப்படத்தின் வெற்றிக்கு பிறகு விஜய் தேவரகொண்டாவின் மார்க்கெட்டும் கொடி கட்டி பறந்தது.


இரண்டு திரைப்படங்களுக்கு சந்தீப் இயக்கியிருக்கும் மூன்றாவது திரைப்படம், அனிமல். இப்படத்தில் பாலிவுட் திரை உலகின் முன்னணி நடிகராக வலம் வரும் ரன்பீர் கபூர், அனில் கபூர், ராஷ்மிகா மந்தனா, பாபி தியோல் ஆகியோர் நடித்திருக்கின்றனர்.அப்பா மகன் பாசத்தை தழுவி எடுக்கப்பட்டிருந்த இத்திரைப்படம் கடந்த டிசம்பர் 1-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இத்திரைப்படம் பல தரப்பட்ட விமர்சனங்களை பெற்றது. பலர் படத்திற்கு எதிராக கண்டனங்களை எழுப்பினர். படத்தை தடை செய்யவும் கூறினர்.

