விஜய் லியோ படத்திற்கு பிறகு தனது 68வது படத்தை இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிக்க இருக்கிறார். இது சம்பந்தமான அறிவிப்பு சில நாட்களுக்கு முன்பாகவே வெளியானது. அதன்படி ஏஜிஎஸ் என்றால் நிறுவனத்தின் தயாரிப்பிலும் யுவன் சங்கர் ராஜா இசையிலும் இப்படம் உருவாக உள்ளது.
மேலும் விஜய் இந்த படத்தில் இரட்டை வேடங்களில் நடிக்க இருக்கிறார்.
விஜய்க்கு தம்பியாக ஜெய் மற்றும் வில்லனாக எஸ் ஜே சூர்யா நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. அத்துடன் ஜோதிகா மற்றும் பிரியங்கா மோகன் இருவரும் இந்த படத்தின் கதாநாயகிகளாக நடிக்க உள்ளனர். இதற்கான பேச்சுவார்த்தைகளும் நடைபெற்று வருவதாக தெரிய வந்துள்ளது.

மேலும் சமீபத்தில் தான் இதில் பிரபுதேவா மற்றும் மாதவன் உள்ளிட்ட மாஸ் ஹீரோக்கள் தளபதி 68 படத்தில் இணைய இருப்பதாக தகவல்கள் கசிந்திருந்தது. தற்போது கூடுதல் தகவலாக, இதில் பீஸ்ட் படத்தில் விஜயுடன் இணைந்து நடித்திருந்த அபர்ணாதாஸ் நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியாகி வருகிறது. அதாவது நடிகர் ஜெய்க்கு ஜோடியாக தளபதி 68-யில் நடிக்க இருக்கிறார் என்று தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றனர். மேலும் அபர்ணாதாஸ் கவின் நடிப்பில் வெளியான டாடா திரைப்படத்தின் கதாநாயகி என்பது குறிப்பிடத்தக்கது.