‘முதலமைச்சரை பற்றி ஒரு பயோக் எடுக்க தோன்றுகிறது’
முதலமைச்சரை பற்றி வாழ்க்கை வரலாறு திரைப்படம் எடுக்கும் அளவுக்கு அனைத்து அம்சங்களும் அவரிடம் இருப்பதாக இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் தெரிவித்துள்ளார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் 70-வது பிறந்தநாளையொட்டி, சென்னை பாரிமுனையில் உள்ள ராஜா அண்ணாமலை மன்றத்தில் கடந்த மாதம் 28-ம் தேதி புகைப்படக் கண்காட்சி தொடங்கப்பட்டது. அவரது வாழ்க்கை வரலாற்றை பறைசாற்றும் இந்த கண்காட்சி இன்றுடன் நிறைவுபெறுகிறது. கண்காட்சியை பார்வையிட்ட பின் செய்தியாளர்களிடம் பேசிய திரைப்பட இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ், முதலமைச்சர் தனக்கென ஒரு வரலாற்றை உருவாக்கியவர் என புகழாரம் சூட்டினார்.
இதே போல, கண்காட்சியை பார்வையிட்ட பின் கவிஞர் வைரமுத்து அளித்த பேட்டியில், இந்த கண்காட்சி ஒளி கொண்டு எழுதப்பட்ட ஒரு கல்வெட்டு என புகழ்ந்தார். “உங்களில் ஒருவன்’ நூலினை ஒளி வடிவில் பார்ப்பதற்கு, இப்புகைப்பட கண்காட்சி உதவியாக இருக்கும் என்றும் தெரிவித்தார்.