தமிழ் சினிமாவில் அருண்குமார் பண்ணையாரும் பத்மினியும் என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். அதைத்தொடர்ந்து இவரது இயக்கத்தில் வெளியான சேதுபதி, சித்தா ஆகிய படங்கள் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. மேலும் இவர் சியான் விக்ரம் நடிப்பில் வீர தீர சூரன் திரைப்படத்தை இயக்கியிருந்தார். இரண்டு பாகங்களாக உருவாகியிருந்த இந்த படத்தில் இரண்டாம் பாகத்தை முதலில் வெளியிட திட்டமிட்டார் அருண்குமார். அதன்படி வீர தீர சூரன் பாகம் 2 என்ற தலைப்பில் உருவாகி இருந்த இப்படம் கடந்த மார்ச் 27ஆம் தேதி திரைக்கு கொண்டுவரப்பட்டது. மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் வெளியான இந்த படம் ரசிகர்கள் மத்தியில் தொடர்ந்து பாசிட்டிவான விமர்சனங்களை பெற்று வெற்றிப் பாதையில் நகர்ந்து கொண்டிருக்கிறது. அதாவது விக்ரம், எஸ்.ஜே. சூர்யா, சுராஜ், துஷாரா ஆகியோரின் நடிப்பு படத்திற்கு எப்படி பலம் தந்ததோ அதைப்போலவே ஜி.வி. பிரகாஷின் இசையும் இந்த படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணம் என்று சொல்லலாம்.
“I placed ‘Madhuri Veeran Thane’ song in #VeeraDheeraSooran purely for fans🫶. Audiences have erupted for that scene & the song won’t be suitable for all films🔥. In overseas copy song was not there, eventhough audience enjoyed the sequence”
– SU ArunKumarpic.twitter.com/XLspVRcZjF— AmuthaBharathi (@CinemaWithAB) April 2, 2025
அடுத்தது இந்த படத்தில் தூள் படத்தில் இடம்பெற்று இருந்த ‘மதுர வீரன் தானே’ பாடல் இடம் பெற்றிருந்த நிலையில் ரசிகர்கள் அதனை கொண்டாடி தீர்த்தனர். இது தொடர்பாக இயக்குனர் அருண்குமார் சமீபத்தில் நடந்த பேட்டியில் பேசியுள்ளார். அதன்படி அவர், “வீர தீர சூரன் படத்தில் ‘மதுர வீரன் தானே’ பாடல் ரசிகர்களுக்காக வைக்கப்பட்டது. இந்த காட்சியை ரசிகர்கள் உற்சாகமாகக் கொண்டாடினர். அந்த பாடல் எல்லா படங்களுக்கும் பொருந்தாது. ஆனால் ஓவர் சீஸிலும் அதே இடத்தில் பார்வையாளர்கள் கைதட்டி ரசித்தார்கள்” என்று தெரிவித்துள்ளார்.