Homeசெய்திகள்சினிமாபொன்னியின் செல்வன் படத்தால் சரிந்த நாவல் விற்பனை

பொன்னியின் செல்வன் படத்தால் சரிந்த நாவல் விற்பனை

-

பொன்னியின் செல்வன் திரைப்படத்தால் புத்தக கண்காட்சியில் பொன்னியின் செல்வன் நாவல் விற்பனை சரிந்துள்ளது.

கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் நாவல் கல்கி வார இதழில் 1950-ம் ஆண்டு முதல் 1954-ம் ஆண்டு வரை ஒவ்வொரு வாரமும் ஒளிபரப்பானது. அதன்பின் 5 புத்தகங்கள் கொண்ட தொகுப்பாக வெளியானது. நாவல் வந்து பல ஆண்டுகள் ஆனாலும், இன்று வரை பொன்னியின் நாவலுக்கு ரசிகர்கள் உள்ளனர். பொன்னியின் செல்வன் நாவலை தழுவி திரைப்படம் எடுக்க பல ஆண்டுகளாக முயற்சிகள் நடைபெற்று வந்தன. எம்ஜிஆரில் தொடங்கி அந்த முயற்சி நீண்டு கொண்டே வந்தது.

இறுதியாக இயக்குநர் மணிரத்னம் பொன்னியின் செல்வன் படத்தை ஒருவழியாக திரைக்கு கொண்டு வந்தார். இந்தப் படத்தில் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, திரிஷா, ஐஸ்வர்யா ராய், சரத்குமார், பிரபு, பிரகாஷ் ராஜ், விக்ரம் பிரபு உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். பொன்னியின் செல்வன் முதல் பாகத்திற்கு ரசிகர்கள் மத்தியில அமோக வரவேற்பைப் பெற்றது. உலகெங்கிலும் சுமார் 500 கோடி வரை வசூல் செய்தது. இத்திரைப்படம் கடந்த 2022-ம் ஆண்டு வௌியானது

அதே நடிகர் நடிகைகளுடன் எடுக்கப்பட்ட இரண்டாம் பாகம் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் வெளியானது. இத்திரைப்படமும் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது. இந்நிலையில், தற்போது சென்னை புத்தக கண்காட்சியில் பொன்னியின் செல்வன் நாவல், விற்பனையாகவில்லை என்றும், இதுவரை இல்லாத அளவு விற்பனை சரிந்துள்ளதாகவும் புத்தக விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர். சுமார் 200 புத்தகங்கள் விற்பனையாகும் இடத்தில், ஒன்று அல்லது இரண்டு புத்தகங்கள் விற்பனையாகி இருப்பதால் கடும் இழப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.

MUST READ