இயக்குனர் சேரன் படம் இயக்குவதில் மட்டுமல்லாமல் நடிப்பதிலும் ஆர்வம் காட்டி வருகிறார். அந்த வகையில் இவர் பல படங்களில் நடித்துள்ளார். மேலும்
இவர் வித்தியாசமான கதைக்களங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருபவர்.
தற்போது இவர் தமிழ்க்குடிமகன் எனும் திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தை இசக்கி கார்வண்ணன் இயக்கியுள்ளார். இதில் சேரனுடன் இணைந்து, ஸ்ரீ பிரியங்கா, லால், எஸ் ஏ சந்திரசேகர், தீப்ஷிகா வேலராமமூர்த்தி மற்றும் பலர் நடித்துள்ளனர்.
லட்சுமி கிரியேஷன்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரித்துள்ளது. சாம் சி எஸ் இசை அமைத்துள்ளார். ராஜேஷ் யாதவ் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
இந்த படத்தின் டிரைலர் தற்போது வெளியாகி உள்ளது. இந்த ட்ரெய்லரின் மூலம் இப்படம் சாதியை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ளது என்பது தெரியவந்துள்ளது. பட்டியல் இன மக்களின் வாழ்க்கையில் சாதிய அரசியல் ஏற்படுத்தும் விளைவுகள் குறித்து இப்படம் பேசுகிறது.
“எங்கள நாதியத்தவங்களா இல்லாம சாதியத்தவங்களா ஆக்கி விடுங்க” என்கிற வசனம் இந்த படத்தில் இடம்பெற்றுள்ளது. இந்த ட்ரெய்லர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. மேலும் இப்படம் விரைவில் வெளியாக இருப்பதாகவும் ட்ரெய்லரில் குறிப்பிடப்பட்டுள்ளது.