spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமா'தக் லைஃப்' ஆல்பத்தில் சேர்க்கப்பட்ட சின்மயி வெர்ஷன் 'முத்தமழை'.... குஷியில் ரசிகர்கள்!

‘தக் லைஃப்’ ஆல்பத்தில் சேர்க்கப்பட்ட சின்மயி வெர்ஷன் ‘முத்தமழை’…. குஷியில் ரசிகர்கள்!

-

- Advertisement -

சின்மயி வெர்ஷன் ‘முத்தமழை’ பாடல் தக் லைஃப் ஆல்பத்தில் சேர்க்கப்பட்டுள்ளது.'தக் லைஃப்' ஆல்பத்தில் சேர்க்கப்பட்ட சின்மயி வெர்ஷன் 'முத்தமழை'.... குஷியில் ரசிகர்கள்!நாயகன் படத்தின் மாபெரும் வெற்றிக்கு பிறகு 36 வருடங்கள் கழித்து கமல் – மணிரத்தினம் கூட்டணியில் தக் லைஃப் திரைப்படம் உருவாகியுள்ளது. இந்த படம் இன்று (ஜூன் 5) உலகம் முழுவதும் வெளியாகிறது. படத்தில் கமல்ஹாசன் உடன் இணைந்து சிம்பு, திரிஷா, அபிராமி, நாசர், அசோக் செல்வன், ஐஸ்வர்யா லக்ஷ்மி, ஜோஜு ஜார்ஜ் மற்றும் பலர் நடித்திருக்கின்றனர். இந்த படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரித்திருக்கிறது. ஏ ஆர் ரகுமான் இதற்கு இசையமைத்திருக்கிறார். ரவி கே சந்திரன் ஒளிப்பதிவு பணிகளை கவனித்திருக்கிறார். மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் இன்று வெளியாக உள்ள இந்த படத்தின் சிறப்பு காட்சிக்கு தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. ரசிகர்களும் மிகுந்த ஆர்வத்துடன் படத்தைக் காண கூட்டம் கூட்டமாக திரண்டு வருகின்றனர்.'தக் லைஃப்' ஆல்பத்தில் சேர்க்கப்பட்ட சின்மயி வெர்ஷன் 'முத்தமழை'.... குஷியில் ரசிகர்கள்! இது ஒரு பக்கம் இருக்க மற்றொரு பக்கம், இந்த படத்தில் இடம்பெற்ற முத்தமழை பாடல் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. அதிலும் இசை வெளியீட்டு விழாவில் சின்மயி பாடியிருந்தது மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் சின்மயி வெர்ஷன் முத்தமழை பாடல் தக் லைஃப் ஆல்பத்தில் 10வது பாடலாக சேர்க்கப்பட்டிருக்கிறது. இந்த தகவல் ரசிகர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது.

MUST READ