- Advertisement -
நகைச்சுவை நாயகனாக நடித்து வந்த சதீஷ் தற்போது ஹீரோவாக பல திரைப்படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். அந்த வகையில் சதீஷ் தற்போது நடித்துள்ள திரைப்படம் கான்ஜூரிங் கண்ணப்பன். அறிமுக இயக்குநர் செல்வின் ராஜ் சேவியர் இந்த படத்தை இயக்கி உள்ளார். ஏஜிஎஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரித்து உள்ளது. படத்தில் சதீஷ், ரெஜினா கஸாண்ட்ரா, விடிவி கணேஷ், ரெடின் கிங்ஸ்லீ, நாசர், சரண்யா பொன்வண்ணன், ஆனந்தராஜ், எல்லி அவ்ரம், ஜேஸன் ஷா உள்பட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இத்திரைப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசை அமைத்துள்ளார். இப்படத்துக்கு எஸ்.யுவா ஒளிப்பதிவு செய்துள்ளார். காமெடி ஹாரர் பாணியில் உருவாகியுள்ள இப்படத்தின் ட்ரெய்லர் அண்மையில் வெளியாகி வரவேற்பை பெற்றது. இந்நிலையில், கான்ஜூரிங் கண்ணப்பன் திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.




