தனுஷ் தென்னிந்திய திரை உலகின் முக்கிய நடிகர்களில் ஒருவராக கருதப்படுபவர். இவர் ஒரு சிறந்த நடிகர் மட்டுமல்லாமல் தயாரிப்பாளர், இயக்குனர், பாடகர், கதை ஆசிரியர், பாடலாசிரியர் என தன் பன்முக திறமைகளை பல்வேறு வழிகளில் வெளிப்படுத்தி வருகிறார். மேலும் இவர், தென்னிந்திய சர்வதேச திரைப்பட விருதுகள் உட்பட 25க்கும் மேலான விருதுகளை பெற்றுள்ளார்.
தற்போது இவர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் கேப்டன் மில்லர் திரைப்படத்தில் நடிக்கிறார். சமீபத்தில் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகி ரசிகர்களிடைய பெரும் வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் இவர் தனது தாய் மற்றும் இரு மகன்கள் யாத்ரா மற்றும் லிங்கா ஆகியோருடன் இன்று காலை திருப்பதிக்கு சென்று சுவாமி ஏழுமலையானை தரிசனம் செய்துள்ளார்.
மேலும் தனுஷ் ,கேப்டன் மில்லர் திரைப்படத்திற்காக அடர்ந்த முடி மற்றும் தாடியை வளர்த்திருந்தார். தற்போது தனது இரண்டு மகன்கள் உடன் தனுஷும் மொட்டை அடித்து திருப்பதி ஏழுமலையானுக்கு தனது முடிகளை காணிக்கையாக செலுத்தியுள்ளார்.
தனுஷ் மொட்டை அடித்து சுவாமி ஏழுமலையானை தரிசனம் செய்யும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
மேலும், இதன் மூலம் கேப்டன் மில்லர் படத்தின் படப்பிடிப்பு முழுவதும் நிறைவடைந்துள்ளதாக தெரியவந்துள்ளது. இதைத்தொடர்ந்து கேப்டன் மில்லர் படத்தின் டீசர், டிரைலர், பாடல்கள் உள்ளிட்டவை வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.அது மட்டுமல்லாமல் தனுஷ் தானே இயக்கி நடிக்கவிருக்கும் 50வது படத்தின் பூஜையும் விரைவில் தொடங்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.


