Homeசெய்திகள்சினிமாதிலீப் நடித்துள்ள பவி கேர்டேக்கர்... ரிலீஸ் தேதி அறிவிப்பு...

திலீப் நடித்துள்ள பவி கேர்டேக்கர்… ரிலீஸ் தேதி அறிவிப்பு…

-

- Advertisement -
திலீப் நடிப்பில் உருவாகி இருக்கும் பவி கேர்டேக்கர் திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது.

மலையாள திரையுலகில், மம்மூட்டி மற்றும் மோகன்லாலுக்கு அடுத்தபடியாக ரசிகர்களால் கொண்டாடப்படும் நடிகர் திலீப். இவர் மலையாளம் மட்டுமன்றி தமிழ், தெலுங்கிலும் ஒரு சில படங்களில் நடித்திருக்கிறார். இவரது நடிப்பில் மலையாளத்தில் வெற்றி பெற்ற பல படங்கள் தமிழ் மொழியில் டப்பிங் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது. கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக இவரது தனிப்பட்ட வாழ்வில் பல பிரச்சனைகள் ஏற்பட்டன. நடிகை பாவனா தொடர்பாக எழுந்த பல பிரச்சனைகள், வழக்குகள் அண்மையில் முடிவுக்கு வந்தன. இதன் பிறகு கிட்டதட்ட நீண்ட இடைவெளிக்கு பிறகு இவர் மீண்டும் திரைப்படங்களில் நடிக்கத் தொடங்கி இருக்கிறார். பல பிரச்சனைகளுக்கு பிறகும் நல்ல கதைகளை தேர்வு செய்து நடிப்பதில் திலீப் கவனம் செலுத்தி வருகிறார்.

we-r-hiring
அந்த வகையில், திலீப் நடிப்பில் இறுதியாக வெளியான திரைப்படம் பாந்த்ரா. இப்படத்தில் தமன்னா ஜோடியாக நடித்திருப்பார். இத்திரைப்படம் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியானது. ஆனால், படம் எதிர்பார்த்த வெற்றி பெறாமல் கலவையான விமர்சனங்களை பெற்றது. அடுத்ததாக தங்கமணி என்ற படத்தில் நடித்து வந்தார். கிராமத்தில் நடைபெற்ற உண்மைச் சம்பவங்களை தழுவி இப்படம் உருவாகி உள்ளது. இதைத் தொடர்ந்து திலீப் நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் பவி கேர்டேக்கர்.

இப்படம் திலீப் நடிக்கும் 149-வது திரைப்படமாகும். காமெடி கதைக்களத்தில் உருவாகியிருக்கும் இத்திரைப்படத்தில் நகைச்சுவை கதாபாத்திரத்தில் திலீப் நடித்திருக்கிறார். இப்படத்தை வினீத்குமார் இயக்கி உள்ளார். இப்படத்தின் டீசர் ஏற்கனவே வெளியாகி வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, வரும் 26-ம் தேதி படம் வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது.

MUST READ