ரஜினி பிறந்தநாளில் ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட் கிடைக்கப்போவதாக தகவல் கசிந்துள்ளது.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் தற்போது ‘ஜெயிலர் 2’ திரைப்படம் உருவாகி வருகிறது. மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் உருவாகும் இந்த படம் கோலிவுட்டில் ரூ.1000 கோடியை தட்டி தூக்கி விடும் என்று பலரும் நம்புகின்றனர். அதன்படி நெல்சன் ‘ஜெயிலர்’ முதல் பாகத்தை போல் இரண்டாம் பாகத்திற்கும் தரமான கதையை கொடுத்து ரசிகர்களுக்கு விருந்து படைப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் படப்பிடிப்புகளும் ஏற்கனவே தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், அடுத்த ஆண்டு டிசம்பர் மாதத்திற்குள் படப்பிடிப்பு நிறைவடையும் என்று சொல்லப்படுகிறது. இதற்கிடையில் இந்த படம் 2026 ஜூன் மாதம் 12ஆம் தேதி திரைக்கு வரும் என ரஜினி அப்டேட் கொடுத்திருந்தார்.
இது ஒரு பக்கம் இருக்க, மற்றொரு பக்கம் வருகின்ற டிசம்பர் 12ஆம் தேதி ரஜினியின் பிறந்தநாளை முன்னிட்டு இந்த படத்திலிருந்து கிளிம்ப்ஸ் வீடியோ வெளியாகும் என்று தகவல் கசிந்துள்ளது. இந்நிலையில் ரஜினி பிறந்தநாளை இன்னும் ஸ்பெஷலாக மாற்ற மற்றொரு அப்டேட்டும் வெளிவர இருக்கிறதாம். அதாவது ‘தலைவர் 173’ என்று தற்காலிகமாக தலைப்பு வைக்கப்பட்டிருக்கும் புதிய படத்தின் புதிய இயக்குனர் ‘பார்க்கிங்’ படத்தை இயக்கிய ராம்குமார் பாலகிருஷ்ணன் தான் என்பது தொடர்பான அறிவிப்பும் வெளியாக வாய்ப்புள்ளது என நம்பத் தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஏனென்றால் தலைவர் 173 படத்தின் இயக்குனர் பட்டியலில் பல இயக்குனர்களின் பெயர்கள் அடிபட்ட நிலையில், படக்குழுவினர் ராம்குமார் பாலகிருஷ்ணனை தேர்ந்தெடுத்துள்ளதாக கிட்டத்தட்ட 90% உறுதியான தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கிறது. மேலும் இந்த படத்திற்காக ராம்குமார் பாலகிருஷ்ணனுக்கு ரூ.10 கோடி வரை சம்பளம் பேசப்பட்டிருப்பதாகவும் தகவல் கசிந்துள்ளது. இனிவரும் நாட்களில் மற்ற தகவல்கள் கிடைக்கும் என்று நம்பப்படுகிறது.


